தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் தனியார் ஆயில் மில் நிரந்தரமாக மூட வலியுறுத்தி ஈரோடு ஆட்சியரிடம் சிபிஎம் மனு!

17 Jun 2026, 12:25 am
சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் தனியார் ஆயில் மில் நிரந்தரமாக மூட வலியுறுத்தி ஈரோடு ஆட்சியரிடம் சிபிஎம் மனு!
<p><strong>சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் தனியார் ஆயில் மில் நிரந்தரமாக மூட வலியுறுத்தி ஈரோடு ஆட்சியரிடம் சிபிஎம் மனு!</strong></p><p>ஈரோடு, ஜூன் 16- ஈரோடு அருகே கூரபாளையம் கிராமம் மூலக்கரையில் செயல் பட்டு வரும் தனியார் எண்ணெய் ஆலையால் நிலத்தடி நீர், காற்று மற்றும் விவசாய நிலங்கள் கடுமை யாகப் பாதிக்கப்பட்டு வருவதால், அந்த ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் திங்களன்று மனு அளித்தனர். கூரபாளையம் கிராமம் மூலக் கரையில் ‘சன்ராஜா ஆயில் இண் டஸ்ட்ரீஸ்’ நிறுவனம் கடந்த 2004 முதல் செயல்பட்டு வருகிறது. இவ் வாலையிலிருந்து சுத்திகரிப்பு செய் யாமல் வெளியேற்றப்படும் ரசா யன கழிவுகளால் நிலத்தடி நீர் மற்றும் காற்று மாசடைந்துள்ளதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர். மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் 2009, 2013 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் நடத்திய ஆய்வுகளிலும், ஆலை நிர்வாகம் விதிகளை மீறி அதிகப்படியான மாசுகளை வெளியேற்றியது உறுதி செய்யப்பட்டது. சமீபத்தில் ஐஎஸ்ஓ அங்கீகாரம் பெற்ற தனியார் நிறுவனம் மூலம் இப்பகுதி கிணற்று நீர் பரிசோதிக் கப்பட்டதில், அதில் அதிகப்படி யான டிடிஎஸ், சல்பேட்டுகள் மற் றும் ரசாயனங்கள் கலந்திருப்பது கண்டறியப்பட்டது. இதனால் நிலத் தடி நீர் குடிக்கவும், விவசாயத்திற் கும் தகுதியற்றதாக மாறியுள்ளது டன், பொதுமக்களுக்கு புற்று நோய், சிறுநீரக பாதிப்பு ஏற்ப டும் அபாயமும் உருவாகியுள்ளது. மேலும், இக்கழிவுகள் பெரும்பள் ளம் ஓடை வழியாகச் சென்று காவிரி ஆற்றிலும் கலக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துப் பொதுமக்கள் கிராமசபை தீர்மா னம் நிறைவேற்றியும், வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றியும், தேர் தலை புறக்கணித்தும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதன் விளைவாக, ஆலையின் செயல்பாட்டை நிறுத்த மாவட்ட நிர் வாகம் உத்தரவிட்டு, கடந்த டிசம்ப ரில் மின் இணைப்பும் துண்டிக்கப் பட்டது. இருப்பினும், சுற்றுச்சூழல் மற் றும் மனித உயிர்களுக்கு கேடு விளைவிக்கும் இந்த ஆலைக்கு, தற்போது 2027 மார்ச் 31 வரை மீண் டும் கால அவகாசம் வழங்கப்பட்டி ருப்பது அதிர்ச்சியளிப்பதாக மார்க்சிஸ்ட் கட்சி மனுவில் சுட்டிக் காட்டியுள்ளது. எனவே, மக்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு, இந்த ஆயில் மில்லை போர்க்கால அடிப்படையில் நிரந் தரமாக மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத் தப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் சிபிஎம் தாலுகா செயலாளர் என்.பாலசுப்பிரமணி, மாவட்டக்குழு உறுப்பினர் பி. லலிதா, வார்டு கவுன்சிலர் தங்க வேல், விவசாயிகள் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.