எர்ணாபுரத்தில் அனைத்து பேருந்துகளும் நிற்க சிபிஎம் மனு
8 Jun 2026, 11:00 pm

எர்ணாபுரத்தில் அனைத்து பேருந்துகளும் நிற்க சிபிஎம் மனு

நாமக்கல், ஜூன் 8- எர்ணாபுரம் பேருந்து நிறுத்தத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளும் நின்று செல்ல நடவ டிக்கை எடுக்கக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் திங்களன்று நடைபெற்ற மக் கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், சிபிஎம் எர்ணாபுரம் கிளை சார்பில் அளிக்கப் பட்ட மனுவில் கூறியிருப்பதாவது: எர் ணாபுரம் ஊராட்சியில் சுமார் ஆயிரத் திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு 24 மணி நேரமும் இயங்கும் அரசு மருத்துவமனை செயல் பாட்டில் உள்ளது. இதனால், தினமும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் இந்த பகுதிக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், நாமக்கல்லில் இருந்து திருச்செங்கோடு மார்க் கமாகவும், மறுமார்க்க மாகவும் இயங்கக்கூ டிய அரசு மற்றும் தனி யார் பேருந்துகள் எர் ணாபுரம் பேருந்து நிறுத் தத்தில் நிற்பதில்லை. நகரப் பேருந்துகள் மட்டுமே இங்கு நின்று செல்கின்றன. இதனால், பொது மக்கள், அவசர சிகிச்சைக்காக மருத்து வமனைக்கு வருவோர் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவதிக்குள்ளா கின்றனர். எனவே, பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இவ்வழியாக செல் லும் அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளும் எர்ணாபுரம் நிறுத்தத் தில் நின்று செல்ல மாவட்ட நிர்வாகம் உரிய உத்தரவிட வேண்டும் என மனு வில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந் நிகழ்வின் போது, சிபிஎம் கிளைச் செய லாளர் மோகன் குமார், நிர்வாகிகள் தங்கராஜ், மௌலீஸ்வரன், முருகே சன், இளவரசி, ராஜம்மாள், ராமசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.