இ - பட்டா கேட்டு சிபிஎம் தலைமையில் முறையீடு
1 hour before
<p><strong>இ - பட்டா கேட்டு சிபிஎம் தலைமையில் முறையீடு</strong></p><p>திருப்பூர், அக். 13 –சின்னவீரம்பட்டி எம்ஜிஆர் நகர் மக்களுக்கு இ - பட்டா வழங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையில் உடுமலை வட்டாட்சியரிடம் விண்ணப்பம் அளித்தனர்.திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம் சின்னவீரம்பட்டி கிராமம் புல எண் 196 /1ஏ,1பி1 இல் (எம்ஜிஆர்நகரில்) ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் 1992ஆம் ஆண்டு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.இந்த பட்டாவிற்கு இ - பட்டா வழங்கக்கோரி செவ்வாயன்று உடுமலை வட்டாட்சியரிடம் விண்ணப்பம் கொடுத்து வலியுறுத்தப்பட்டது. இம்மனுக்களை பெற்றுக் கொண்ட வட்டாட்சியர் விண்ணப்பங்கள் மீது உரிய மேல் நடவடிக்கை எடுத்து எம்ஜிஆர் நகர் மக்கள் பட்டா பிரச்சனைக்கு இ - பட்டா வழங்குவதாக உறுதியளித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் ஆர். சுந்தரம்தலைமையில் நடைபெற்ற இந்த இயக்கத்தில், கட்சியின் நகரச் செயலாளர் கே.தண்டபாணி, மாவட்டக்குழு உறுப்பினர் ஆ.பஞ்சலிங்கம், நகரக்குழு உறுப்பினர்கள் து.சித்ரா, எஸ்.வசந்தி, தோழன் ராஜா, ஏ.எஸ். ஜஹாங்கீர் மற்றும் கட்சிக் கிளை ஊழியர்கள், எம்ஜிஆர் நகர் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.</p>
