பாதியில் நிற்கும் சாலை மற்றும் வடிகால் பணிகள் உடனடியாக தொடங்க வலியுறுத்தி சிபிஎம் மனு
13 Dec 2025, 5:13 pm
<p><strong>பாதியில் நிற்கும் சாலை மற்றும் வடிகால் பணிகள் உடனடியாக தொடங்க வலியுறுத்தி சிபிஎம் மனு</strong></p>
<p>கோவை, டிச.13- சின்னவேடம்பட்டி பகு திகளில், பாதியில் நிற்கும் மற்றும் தொடங்கப்படாத வடிகால், சாலைப் பணி களை உடனடியாக ஆரம்பிக் கக்கோரி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் உதவிப் பொறியாளரிடம் சனியன்று மனு அளித்தனர். கோவை மாநகராட்சி, வடக்கு மண்டல உதவிப் பொறியாளர் அலுவல கத்தில் அளிக்கப்பட்ட மனு வில், சின்னவேடம்பட்டி வார்டு எண் 12க்குட் பட்ட பகுதிகளில் நிலவும் பிரச்சினைகள் குறித்து வலியுறுத்தப்பட்டது. குறிப்பாக, அத்திப்பாளையம் மெயின் ரோட்டில் அமைக்கப்பட்டு வந்த மழைநீர் வடிகால் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், பிள் ளையார் வீதி குறுக்கு சந்தில் வடிகால் மற்றும் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிக்கு பூஜை மட்டும் போடப்பட்டு தற் போது வரை தொடங்கப்படாமல் உள்ள தாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. மேலும், தண்டபாணி வீதியில் சாலை அமைக்கும் பணியும் ஆரம்பிக்கப்படவில்லை எனக் குறிப்பிடப்பட்டது. இதேபோல், வார்டு எண் 3-இல் உள்ள நேதாஜி நகர், ஆதிதிராவிடர் சாலை, குறிஞ்சி நகர், சுப்பிரமணிய நகர், சிவக்குமார் லேஅவுட் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வடி கால்களை சீரமைத்து, புதிய சாலைகள் அமைத்துத் தர வேண்டும் எனவும் வலியு றுத்தப்பட்டது. வார்டு 12-ல் உள்ள வடக் காலத் தோட்டம் பகுதியில் சாலை அமைத்து, தெருவிளக்கு கம்பங்கள் அமைத்துத் தர வும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த அத்தியாவசியப் பணிகளை வரும் 20-ஆம் தேதிக்குள் மாநகராட்சி நிர்வாகம் தொடங்கிட வேண்டும் என்றும், தவறினால் டிச.22 ஆம் தேதி சின்னவேடம்பட்டி பிரிவு அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முற்றுகைப் போராட்டம் நடத் தப்படும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட் டுள்ளது. மனு அளிக்கும் நிகழ்வில், வார்டு 12 ஆவது வார்டு கவுன்சிலர் வி.ராமமூர்த்தி, சிபிஎம் ஒன்றியக்குழு உறுப்பினர் பால சுப்ரமணியம், கிளைச் செயலாளர்கள் மோகன், அருள்குமார், சி.வி.ராஜேந்திரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் திரளானோர் பங்கேற்றனர்.</p>
