ளம்பெண் மரண வழக்கில் முழுமையான விசாரணை நடத்த எஸ்.பி.-யிடம் சிபிஎம் மனு
14 Jul 2026, 1:13 am
<p><strong>இளம்பெண் மரண வழக்கில் முழுமையான விசாரணை நடத்த எஸ்.பி.-யிடம் சிபிஎம் மனு</strong></p><p>கடலூர், ஜூலை 13- நெல்லிக்குப்பம் அருகே வினோதா (26) என்ற இளம்பெண் உயிரிழந்த வழக்கில், முழுமையான விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட நபர்களைக் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாள ரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: "நெல்லிக்குப்பம் திருக்கண்டீஸ்வரத்தைச் சேர்ந்த ரகுவின் மகள் வினோதா, கடந்த ஜூன் 29-ம் தேதி சந்தேகத்திற்கிடமான முறையில் உயி ரிழந்தார். நெல்லிக்குப்பம் வாழப்பட்டையைச் சேர்ந்த சச்சின் என்பவர், கடந்த இரண்டரை ஆண்டு களாக வினோதாவைக் காதலித்து வந்ததாகவும், அந்த காலகட்டத்தில் அவரைத் தொடர்ந்து துன்புறுத்தித் தாக்கி வந்ததாகவும் புகார் எழுந்துள்ளது. மேலும், வினோதா உயிரிழந்த நாளில் சச்சின் அவரது வீட்டிற்கு வந்து சென்றது காவல்துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே, இந்த வழக்கில் உண்மைகளைக் கண்டறிந்து, மரணத்திற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று தெரி விக்கப்பட்டுள்ளது. மனு அளிக்கும் நிகழ்வின்போது, மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.அமர்நாத், நெல்லிக்குப்பம் பகுதிக்குழுச் செயலாளர் ப.ஸ்டீபன் ராஜ், பகுதிக்குழு உறுப்பினர் தர்மேந்திரன் மற்றும் திருக்கண்டீஸ்வரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் உடனிருந்தனர்.</p>
