அடிப்படை வசதிகள் கோரி சிபிஎம் சார்பில் மனு
30 Oct 2026, 11:39 pm

அடிப்படை வசதிகள் கோரி சிபிஎம் சார்பில் மனு

கடலூர், அக்.30-கடலூர் மாவட்டம், கம்மாபுரம் ஒன்றியம் சேப்பளாநத்தம், ஊமங்கலம் கிளைகளில் 100 நாள் வேலை வழங்குதல், கழிவுநீர் கால்வாய் அமைத்தல், புதிய தார்ச்சாலை மற்றும் சிமெண்ட் சாலை அமைத்தல், ஓராண்டுக்கும் மேலாகத் திறக்கப்படாமல் உள்ள கழிப்பறையைத் திறந்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவருதல், கரும காரியக் கொட்டகை அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஆர்.கலைச்செல்வன் தலைமையில் துணை

வட்டார வளர்ச்சி அலுவலர் ராமச்சந்திரனி டம் மனு அளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கே. அன்புச்செல்வி, எஸ்.கனகராஜ் உள்ளிட்டோர் 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.