முந்தய பக்கம்

பீகாரிலும் சிபிஎம் மக்கள் போராட்ட நடைபயணம்

7 Mar 2026, 2:36 pm
பீகாரிலும் சிபிஎம் மக்கள் போராட்ட நடைபயணம்
<p><strong>பீகாரிலும் சிபிஎம் மக்கள் போராட்ட நடைபயணம்</strong></p> <p>பாட்னா மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மாநிலங்களை தொடர்ந்து, பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் விவசாய விளைபொருட்க ளுக்கு நியாயமான விலை வழங்கக் கோரி யும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை &nbsp;உறுதிச் சட்டத்தை மீண்டும் முழுமையாகச் செயல்படுத்தக் கோரியும், அமெரிக்காவுட னான மக்கள் விரோத வர்த்தக ஒப்பந்தங்களை &nbsp;ரத்து செய்ய வேண்டும், தரமான கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் பொதுச் சொத்துக்கள் சூறையா டப்படுவதைத் தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வியாழனன்று மாவட்ட அளவிலான மக்கள் போராட்ட நடை பயணம் விபூதிபூரில் தொடங்கியது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொது மக்களைச் சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்தப் பயணம், மார்ச் 17ஆம் தேதி சமஸ்தி பூரை சென்றடைகிறது. தொடர்ந்து சிபிஎம் மத்தியக் குழுவின் அழைப்பின் பேரில், மார்ச் 24 அன்று தில்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெறவுள்ள பிரம்மாண்டமான பேரணியில் கலந்துகொண்டு அதை வெற்றிபெறச் செய்யு மாறு இந்தப் பயணத்தின் மூலம் அழைப்பு விடுக்கப்படுகிறது. சமஸ்திபூர் நடைபயணத்தை மத்தியக்குழு உறுப்பினர் அவதேஷ் குமார், மாநில செயற் குழு உறுப்பினர் அஜய் குமார், மாவட்டச் செய லாளர் ராமஸ்ராய் மஹதோ மற்றும் பிற தலை வர்கள் முன்னின்று நடத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.</p>
Share
FacebookXWhatsAppTelegram