முந்தய பக்கம்

சிபிஎம்-இல் இணைந்த மாற்றுக் கட்சியினர்

26 May 2026, 10:43 pm
சிபிஎம்-இல் இணைந்த மாற்றுக் கட்சியினர்
<p><strong>சிபிஎம்-இல் இணைந்த மாற்றுக் கட்சியினர்</strong></p><p>நாகப்பட்டினம், மே 26- நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியம், அம்பல் ஊராட்சியில் மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்த இணைப்பு நிகழ்ச்சிக்கு, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் பி.எம்.லெனின் தலைமை வகித்தார். மணிவண்ணன், கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர். கட்சியில் இணைந்தவர்களுக்கு செந்துண்டு அணிவித்து, கட்சி கொடியை ஏற்றி அனைவரையும் வரவேற்று மாவட்டச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வி.மாரிமுத்து வாழ்த்துரை வழங்கினார். கொடியேற்று நிகழ்ச்சியில், சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர். ராஜேந்திரன், சிபிஎம் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் பாரதி, மார்க்ஸ், மகேந்திரன், புஷ்பலதா, விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் என். சந்திரசேகரன், கிளைச் செயலாளர் பால் பக்கிரிசாமி, தமுஎகச தலைவர் கல்யாணசுந்தரம், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர் அன்பழகன், ஆசிரியர் ஜெயானந்தம், கோவிந்தசாமி ராஜாராமன் மற்றும் பலர் கலந்து கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram