தமிழக மக்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளுக்காக இடதுசாரிகள் கூட்டாக வலுவாக போராடுவோம்!
6 Jul 2026, 9:48 pm

தமிழக மக்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளுக்காக இடதுசாரிகள் கூட்டாக வலுவாக போராடுவோம்!

தோழர் டி.குமரவேல் படத்திறப்பு நிகழ்வில் சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் உறுதி!

மதுரை, ஜூலை 6- மதுரை மாநகராட்சி 23ஆவது வார்டு மாமன்ற உறுப்பினரும், சிபிஎம் மாநகர் மாவட்டக்குழு உறுப்பினருமான மறைந்த தோழர் டி. குமரவேல் அவர்களின் உருவப் படத்திறப்பு மற்றும் அவரது குடும்பத்தின ருக்கு ரூ.5 லட்சம் குடும்ப பாதுகாப்பு உதவி நிதி வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை மதுரை செல்லூரில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தோழர் டி. குமரவேல் அவர்களின் திருவுருவப் படத்தை திறந்து வைத்துப் பேசிய சிபிஎம் மாநிலச் செயலா ளர் பெ. சண்முகம், அவரது மறைவு கட்சி க்கும், மாற்றுத்திறனாளிகள் இயக்கத்திற்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என்று புகழாரம் சூட்டினார். மேலும், ஆளுநரின் அதிகார வரம்பு மீறல்கள், தமிழக வெற்றிக் கழக அரசுக்கான ஆதரவு நிலைப் பாடு மற்றும் இடதுசாரி ஒருங்கிணைப்புக் குழுவின் அவசியம் குறித்து விரிவாகப் பேசினார்.

அதிகார வரம்பை மீறும் ஆளுநர்; அரசியல் சாசனத்திற்கு முரணானது நிகழ்ச்சியில் ஆளுநரின் செயல்பாடு கள் குறித்துக் கடுமையான விமர்சனங் களை முன்வைத்த பெ. சண்முகம், “ஆளு நரின் அதிகார வரம்புகள் அரசியல் சாசனத்தில் தெளிவாக வரையறுக்கப் பட்டுள்ளன.

அமைச்சரவையின் ஆலோ சனையின் பேரில்தான் ஆளுநர் செயல்பட வேண்டும் என்று முன்னாள் ஆளுநர் ஆர்.என். ரவி விவகாரத்தில் உச்சநீதிமன்றமே தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது. தற்போதைய ஆளுநர் அந்தத் தீர்ப்பை அறியாமல் இருந்தாலோ அல்லது மறந்திருந்தாலோ, அதைப் படித்து புரிந்துகொள்ள வேண்டும்.

மக்க ளால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும் நிலையில், தனி ஆட்சி நடத்துவதைப் போல ஆளுநர் செயல்படுவது அரசியல் சாசனத்திற்கு முரணானது மற்றும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது” என்றார்.

மேலும், “பொதுமக்கள் தங்களின் பிரச்சனைகளுக்கு ஆளுநர் மாளிகை யை அணுகலாம் என ஆளுநர் அழைப்பு விடுப்பது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இணையான அல்லது அதை விட உயர்ந்த அதிகாரம் கொண்டவராக தன்னை முன்னிறுத்தும் முயற்சியாகவே பார்க்கிறோம்.

பொதுமக்களின் பிரச்ச னைகளுக்குத் தீர்வு வழங்கும் எந்த நிர்வாக அதிகாரமும் ஆளுநரிடம் கிடை யாது” என்றும் அவர் சுட்டிக்காட்டினார். தவெக அரசு குறித்த சிபிஎம் நிலைப்பாடு தெளிவானது தமிழ்நாட்டின் தற்போதைய அர சியல் சூழல் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி யின் நிலைப்பாடு குறித்துப் பேசிய அவர், “தமிழ்நாட்டில் எந்த வகையிலும் நேர டியாகவோ மறைமுகமாகவோ பாஜக ஆட்சி அமையக் கூடாது என்பதே மார்க்சிஸ்ட் கட்சியின் உறுதியான கொள்கை நிலைப்பாடாகும்.

குடியரசுத் தலைவர் ஆட்சி வருவதைத் தடுக்க வேண்டும் என்ற நோக்கில், அதிக சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சி என்ற அடிப்படையில் தமிழக வெற்றி கழக அரசுக்கு வெளியில் இருந்து ஆத ரவு அளிப்பதாகப் பகிரங்கமாக அறி வித்துள்ளோம். ஆனால், திராவிட முன் னேற்றக் கழகத்தின் சில தலைவர்களும், ஆதரவாளர்களும் நமது நிலைப் பாட்டைத் தொடர்ந்து விமர்சித்து வருகின்ற னர்” என்று குறிப்பிட்டார்

. தொடர்ந்து பேசிய அவர், “அதே நேரத்தில், அந்த அரசு மதச்சார்பின்மைக் கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம். மதச்சார்பற்ற ஆட்சிக்கே நமது ஆதரவு தொடரும்.

தமிழக வெற்றிக் கழகம் எதைச் செய்தாலும் அதை முழுமை யாக ஆதரிப்பது என்பது மார்க்சிஸ்ட் கட்சி நிலைப்பாடு அல்ல. ஒவ்வொரு பிரச்ச னையையும் எங்களது சுயேச்சையான அரசியல் நிலைப்பாட்டின் அடிப்படையில்தான் அணுகுகிறோம். கரூர் மரணம் தொடர்பான விவகாரத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்த கருத்தை நாங்கள் ஏற்கவில்லை.

விசா ரணை வளையத்திற்குள் அவர்களே இடம்பெற்றிருக்கும் சூழலில், ஒரு அமைச்சர் இவ்வாறு கருத்து தெரிவிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

ஒரு அர சுக்கு ஆதரவு அளிக்கிறோம் என்ப தற்காக, அந்த அரசின் அனைத்து முடிவு களையும் ஏற்றுக்கொள்ளும் கட்சியாக சிபிஎம் ஒருபோதும் செயல்படாது” எனத் தெளிவுபடுத்தினார்.

‘இடதுசாரி ஒருங்கிணைப்புக் குழு’ மாநில அளவில் உருவாக்கப் பட்டுள்ள இடதுசாரிக் கட்சிகளின் ஒருங்கி ணைப்புக்குழு குறித்துப் பேசிய பெ. சண்முகம், “முதலாளித்துவ சமூக அமை ப்புக்கு மாற்றாக சோசலிச சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற இலட்சியத் தோடு மார்க்சிஸ்ட் கட்சி செயல்பட்டு வரு கிறது.

அந்த நோக்கத்திற்காகத்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சிபிஐ (எம்-எல்) விடுதலை ஆகிய மூன்று கட்சி களும் இணைந்து மாநில அளவிலான ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்துள் ளன.

இந்த ஒருங்கிணைப்புக் குழு தேர்தலுக்கான கூட்டணி அல்ல; தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகள், சமூக மற்றும் பொருளா தாரப் பிரச்சனைகளுக்காக இணைந்து போராடும் மக்கள் இயக்கமாகும்.

வருகிற 20ஆம் தேதி மீண்டும் ஒருங்கிணைப்புக் குழு கூடி அடுத்தகட்ட மக்கள் போராட்டங் கள் குறித்து முடிவெடுக்கும்” என்றார். சு.வெங்கடேசன் எம்.பி., புகழஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், “மதுரை மாமன்றத்தில் தற்போதைய ஆட்சிக்கு அரசியல் ரீதியாக ஆதரவு அளித்துக் கொண்டே, மக்க ளுக்கு எதிரான எந்தத் திட்டம் வந்தாலும் அதற்கு எதிராக உறுதியுடன் குரல் கொடு த்து, மக்கள் நலனுக்காக மன்றத்திலும் களத்திலும் போராடுவது மிகவும் சவா லான பணி.

அந்தச் சவாலை நேர்மையுட னும், கம்யூனிஸ்டுகளுக்கே உரிய அறச் சீற்றத்துடனும் எதிர்கொண்டு வார்டு மக்க ளின் பிரச்சனைகளுக்காகத் தொடர்ந்து போராடியவர் தோழர் குமரவேல்” என்று புகழாரம் சூட்டினார்.

மாநகராட்சி வரி ஏய்ப்பு முறைகேடும்; திசா (DISHA) குழுவின் அதிரடியும் அண்மைய அரசியல் விவாதங்கள் குறித்துப் பேசிய சு. வெங்கடேசன், “அதி முக, திமுக, பாஜக ஆகிய கட்சிகள் அனைத்தும் குதிரைப் பேரம் தொடர்பாக ஆளுநரிடம் மனு அளித்துள்ளன.

இந்திய அரசியலில் அதிக அளவில் குதிரைப் பேர அரசியலை நடத்திய பாஜக, அதே விவகாரத்தில் நடவடிக்கை கோரி மனு அளிப்பது சிரிப்பை வர வழைக்கிறது. ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான எவரையும் கட்சியில் இணைக்க மாட்டோம் என்று கூறக்கூடிய தார்மீக வலி மை கம்யூனிஸ்ட்டுகளுக்கே உள்ளது.

கேரளாவில் பெரும்பான்மை குறைந்த போதும், குதிரை பேரத்தின் மூலம் ஆட்சி யைப் பிடிக்க மாட்டோம் என்று துணிச்ச லுடன் அறிவித்தது எங்களது இடது ஜனநாயக முன்னணிதான்” என்றார்.

மேலும், “மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்புக் குழுவின் (DISHA) தலை வராக, எந்த அநீதிக்கும் சமரசம் செய்யா மல் கடந்த ஏழு ஆண்டுகளாகப் பணி யாற்றி வருகிறோம். அதிமுக ஆட்சிக் காலத்தின் ஸ்மார்ட் சிட்டி முறைகேடு முதல், தற்போதைய மாநகராட்சி வரி ஏய்ப்பு முறைகேடு வரை முதன்முதலில் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது இந்த திசா குழுதான். மத்திய மென்பொருள் (மத்திய சர்வர்) மூலம் நடைபெற்ற இந்த வரி ஏய்ப்பு முறைகேடு மதுரையில் மட்டு மல்ல, மாநிலத்தின் அனைத்து மாநக ராட்சிகளிலும் நடந்திருக்க வாய்ப்புள் ளது.

எங்களின் நோக்கம் அதிகாரத்தின் சுகத்தை அனுபவிப்பது அல்ல; அதிகா ரத்தை மக்களின் நலனுக்காகப் பயன் படுத்தச் செய்வதே ஆகும்.

அந்த லட்சியப் பாதையில் பயணித்த முன்னணி தோழர் குமரவேல் அவர்களின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்” என்று சு. வெங்கடேசன் பேசினார்.