சிபிஎம் நடத்திய சடங்கு மறுப்பு திருமணம்
12 hours before

சிபிஎம் நடத்திய சடங்கு மறுப்பு திருமணம்

உளுந்தூர்பேட்டை, செப்.17-கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை கிழக்கு ஒன்றியத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்.சத்திவேல் - கே.ஊர்மிளாஆகியோரின் சடங்கு மறுப்பு திருமணம் வியாழனன்று (செப்.17) நடைபெற்றது.சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி.எம்.ஜெயசங்கர் தலைமை தாங்கி திருமணத்தைநடத்தி வைத்தார். ஒன்றிய செயலாளர் வேலா.பாலகிருஷ்ணன் வரவேற்றார். மாவட்டக் குழு உறுப்பினர் எம்.ஆறுமுகம் முன்னிலை வகித்தார்.

இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி. ரகுராமன்,ஜெ.ஜெயக்குமார்,ஆர் ஆர் குப்பம் ஊராட்சி மன்றத் தலைவர் தங்க.ரமேஷ் மாவட்டக் குழு உறுப்பினர் கே வீரமணி, கே ஆனந்த்ராஜ், பி ஸ்டாலின், ஒன்றிய குழு வி.மார்த்தாண்டம். எஸ். சேகர், பி.தணிகாசலம், கே.சீனிவாசன், எம்.ஜோதிலிங்கம் மற்றும் குடும்ப உறுப்பி

னர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் மணமக்கள் நன்றி கூறினர்.