தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தூய்மைப் பணி தனியாருக்கா? அமைச்சரிடம் சிபிஎம் முறையீடு!

7 Jun 2026, 12:18 am
தூய்மைப் பணி தனியாருக்கா? அமைச்சரிடம் சிபிஎம் முறையீடு!

தூய்மைப் பணி தனியாருக்கா? அமைச்சரிடம் சிபிஎம் முறையீடு!

திருப்பூர், ஜூன் 6- திருமுருகன்பூண்டி நகராட்சியில் ஆய்வு மேற் கொண்ட அமைச்சர் கமலியிடம் மார்க்சிஸ்ட் கட்சியி னர், தனியார் குப்பை சேகரிக்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்து, நகராட்சியே ஊழியர்களை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

திருமுருகன்பூண்டி நகராட்சிப் பகுதியில் அவிநாசி சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு கால்நடை பராமரிப் புத் துறை அமைச்சருமான கமல் சனியன்று பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் அமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்த னர். அதில், கோவை - திருப்பூர் பிரதான சாலையில் அமைந்துள்ள நல்லாற்றைத் தூர்வார வேண்டும் என்று ஓராண்டிற்கு முன்பே மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்திருந்தோம்.

இது தொடர்பாக பொதுப் பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், தமிழக அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்தால் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றனர். இப்பணிகளுக்கு சமூக சேவை அமைப்புகளும் நிதி வழங்க முன்வந்துள்ளன. இருப்பினும், அரசிடமிருந்து இதுவரை நிதி கிடைக்காத தால் தூர்வாரும் பணி முடங்கியுள்ளது.

எனவே, அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து நல்லாற்றைத் தூர் வார வேண்டும்; ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண் டும். மேலும், திருமுருகன்பூண்டி பகுதியில் பொது மக்களுக்கும், பள்ளிக் குழந்தைகளுக்கும் பெரும் இடை யூறாக செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும், துரை சாமி நகர் மற்றும் மகாலட்சுமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொது பூங்காக்களை சீரமைத்துப் பரா மரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். இதனிடையே, தொடர்ந்து மகாலட்சுமி நகர் பகுதி யில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்ட போது, அங்கு குப்பை அள்ளும் தூய்மைப் பணியாளர்கள் எவ்விதப் பாதுகாப்பு உபகரணங்களும் (கையுறைகள், காலணி கள்) அணியாமல் ஆபத்தான முறையில் பணியாற்றி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனே நகராட்சிப் பொறியாளரை அழைத்த அமைச்சர், “ஏன் தொழிலாளர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகர ணங்கள் வழங்கப்படவில்லை?” என்று காரசாரமாகக் கேள்வி எழுப்பினார். அப்போது அருகில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் குறுக்கிட்டு, நக ராட்சியில் குப்பை அள்ளும் பணி தனியாரிடம் ஒப்படைக் கப்பட்டுள்ளது.

அந்த தனியார் நிறுவனம் தொழிலா ளர்களுக்குப் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கு வதில்லை. மேலும், தூய்மைப் பணியாளர்களின் சம்ப ளத்தில் இ.எஸ்.ஐ மற்றும் பி.எஃப் பிடித்தம் செய்யாமல் பெரும் முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்த தனியார் நிறுவனத்தின் ஒப்பந்த காலம் கடந்த மே மாதத்துடன் நிறைவடைந்துவிட்டது. எனவே, தொழிலா ளர்களை வசிக்கும் இந்த நிறுவனத்திற்கு மீண்டும் கால நீட்டிப்பு வழங்கக் கூடாது” என அமைச்சரிடம் முறை யிட்டனர்.

கோரிக்கைகள் குறித்து செவிமடுத்த அமைச்சர், இது குறித்து பரிசீலித்து உரிய அதிகாரிகள் மூலம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இந்நிகழ்வின் போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் நகர்மன்ற உறுப்பினர் சுப்பிரமணியம், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் வெங்கடாசலம், பாலசுப்பிரமணி யம், தமுஎகச திருமுருகன்பூண்டி கிளை துணைச் செய லாளர் அருணாசலம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் நகராட்சி அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.