தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது முதல்வர் விஜய்க்கு சிபிஎம் வலியுறுத்தல்

16 Jun 2026, 11:53 pm
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது  முதல்வர் விஜய்க்கு சிபிஎம் வலியுறுத்தல்
<p><strong>ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது முதல்வர் விஜய்க்கு சிபிஎம் வலியுறுத்தல்</strong></p><p>கடலூர், ஜூன் 16- கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டையை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் நான்கு ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க ஹிந்துஸ்தான் எண்ணை நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தி, தமிழக முதல்வ ருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்ட செயலாளர் கோ.மாதவன் மனு அனுப்பியுள்ளார். கடலூர் மாவட்டம் ஏற்கனவே சுரங்க நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட பகுதி யாகத் தாது அறக்கட்டளையால் அறி விக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில், மேலும் சுற்றுச்சூழல் சீர்கேட்டை உருவாக்கும் இத்திட்டத்தை அனுமதிப்பது கண்டிக்கத்தக்கது. இத்திட்டத்திற்காக பரங்கிப்பேட்டையிலிருந்து 18 கி.மீ தொலைவில் கிணறுகள் அமைக்கப்பட வுள்ளன. இதனால் கடல் வளம், அப்பகுதி யில் உள்ள மாங்குரோவ் காடுகள் மற்றும் ஆயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வா தாரம் கடுமையாகப் பாதிக்கப்படும். ஏற்கனவே காவிரி பாசன மாவட்டங்கள் ‘பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக’ அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த எல்லையிலிருந்து சற்று தள்ளி இத்திட்டத்தைச் செயல்படுத்த நிறுவனம் முயல்வது தந்திரமானது. தமிழகத்தில் ஒன்றிய அரசு பல்வேறு ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு உரிமம் வழங்கினாலும், மாநில அரசு தொடர்ந்து அதனை எதிர்த்து வருகிறது. அதே உறுதியான நிலைப்பாட்டைத் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலையும், கடல் வளத்தையும் அழிக்கும் எந்தவொரு திட்டத்திற்கும் தமிழக அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்றும், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்ட லத்தில் கடல் பகுதியையும் இணைத்துப் பாதுகாக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்ட குழு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.