முந்தய பக்கம்

சிபிஎம் புதிய கிளை தொடக்கம்

3 Jul 2026, 1:06 am
சிபிஎம் புதிய கிளை தொடக்கம்
<p><strong>சிபிஎம் புதிய கிளை தொடக்கம் </strong></p><p>திருவள்ளூர், ஜூலை 2 – திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டம் தாழவேடு கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய கிளை புதன்கிழமை (ஜூலை 1) தொடங்கப்பட்டது. இந்த நிகழ்விற்கு கிளைச் செயலாளர் லதா தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் எஸ். கோபால் கட்சியின் கொடியை ஏற்றி வைக்க, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி. பெருமாள் புதிய கிளைக்கான பெயர் பலகையைத் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர். தமிழ்அரசு, வட்டச் செயலாளர் வி. அந்தோணி மற்றும் மாவட்ட குழு உறுப்பினர் ஏ. அப்சல் அகமது ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். விழாவின் ஒரு பகுதியாக, தாழவேடு கிளை சார்பாக கட்சியின் ஓர் ஆண்டு சந்தா செலுத்தப்பட்டதுடன், ‘தீக்கதிர்’ இதழுக்கு 10 புதிய சந்தாதாரர்களும் பதிவு செய்யப்பட்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram