ராஜஸ்தானில் சிபிஎம் சார்பில் ‘நீதி சபை’
16 Jul 2026, 9:05 pm

ராஜஸ்தானில் சிபிஎம் சார்பில் ‘நீதி சபை’

பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தின் பத்ராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜூலை 15 அன்று ‘நீதி சபை’ என்ற பெயரில் மக்கள் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் அபிஷேக் சர்மாவுக்கு (படுகொலை) நீதி கிடைக்க வேண்டும் ; மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும் ; சீர்குலைந்து வரும் சட்டம்-ஒழுங்கு நிலையை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் ; குடிநீர் மற்றும் பாசனத்திற்குத் தேவையான தண்ணீர் வசதியை உறுதி செய்ய வேண்டும் ; அதிகரித்து வரும் போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க வேண்டும் உள்ளிட்டவைகளை நிறைவேற்ற மாநில பாஜக அரசுக்கு நீதி சபை கோரிக்கை விடுத்தது.

இந்தச் சபையில் சிபிஎம் ஊழியர்கள், கிராமப்புற மக்கள் என நூற்றுக்கணக்கானோர் திரளாகப் பங்கேற்றுத் தங்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.

மேலும்,”எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்!” என்று சபையில் பங்கேற்றவர்கள் உறுதியாக முழக்கமிட்டனர்.