சிபிஎம் அகில இந்திய தலைவர்கள் தமிழகத்தில் தேர்தல் பரப்புரை!
10 Apr 2026, 5:30 am

சிபிஎம் அகில இந்திய தலைவர்கள் தமிழகத்தில் தேர்தல் பரப்புரை!

சென்னை, ஏப். 9 - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்படைந்துள்ள நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் விஜய கிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத், பிருந்தா காரத் உள்ளிட்ட அகில இந்திய தலைவர்கள், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, தமிழகம் முழுவதும் பரப்புரை மேற்கொள்கின்றனர்.

அவர்களின் பயணத்திட்டம் வருமாறு: எம்.ஏ. பேபி ஏப்ரல் 11 அன்று திருவள்ளூர், 12 அன்று மயிலாப்பூர், 20 அன்று பழனி/திண்டுக்கல் ஆகிய இடங்களில் பரப்புரை செய்கிறார். விஜய கிருஷ்ணன் ஏப்ரல் 16 அன்று கோவை, 17 அன்று பழனி, 18 அன்று திண்டுக்கல், 19 அன்று திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் பேசுகிறார்.

பிரகாஷ் காரத் ஏப்ரல் 16 அன்று பல்லாவரம், 17 அன்று கத்திரிவாக்கம், 18 அன்று திருவள்ளூர் பகுதிகளில் பரப்புரை செய்கிறார். பிருந்தா காரத் ஏப்ரல் 11 அன்று திருப்பெரும்புதூர், 12 அன்று கீழ்ப்பாக்கம், 13 அன்று கத்திரிவாக்கம், 14 அன்று திருவள்ளூர் பகுதிகளில் பேசுகிறார்.