காலிப் பணியிடங்களை நிரப்புக; தொழிலாளர் குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.26,000 ஆக உயர்த்துக!
yesterday

காலிப் பணியிடங்களை நிரப்புக; தொழிலாளர் குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.26,000 ஆக உயர்த்துக!

சட்டமன்றத்தில் சிபிஎம் குழுத் தலைவர் ஆர். செல்லசுவாமி பேச்சு!

சென்னை, ஜூன் 22- தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவரும் பத்மநாபபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஆர். செல்லசுவாமி இன்று உரையாற்றினார்.

புதிய தவெக அரசின் கொள்கை விளக்கமாக அமைந்துள்ள ஆளுநர் உரையை வரவேற்றுப் பேசிய அவர், உழைக்கும் மக்களின் பல்வேறு வாழ் வாதாரக் கோரிக்கைகளை முன்வைத் தார்.

ஊழியர்கள், தொழிலாளர் நலன் மற்றும் காலிப் பணியிடங்கள்

உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரி யர் காலியிடங்களை நிரப்பும் அறி விப்பை வரவேற்ற அவர், பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங் களில் நீண்டகாலமாக நிரப்பப்படா மல் இருக்கும் ஏனைய காலிப் பணி யிடங்களையும் விரைந்து நிரப்பக் கேட்டுக்கொண்டார்.

தற்போது பல்வேறு நிலைகளில் நிரந்தரமின்றிப் பணியாற்றும் ஆசிரி யர்களை நிரந்தரப்படுத்தவும், ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) வெற்றி பெற்றவர்களுக்குப் பணி வழங்கவும் ஆளுநர் உரையில் அறிவிப்பு இல்லாதது ஏமாற்றமளிக்கிறது.

தமிழகத்தில் தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை 26,000 ரூபாயாக நிர்ணயம் செய்ய முத்தரப்புக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். அரசுத் துறைகள் மற்றும் மின்சாரம், போக்குவரத்து போன்ற பொதுத்துறை நிறுவனங்களில் தினக்கூலி, ஒப்பந்த கூலி, தொகுப்பூதியத்தில் பணியாற் றும் ஊழியர்களை நிதிநிலை அறிக்கை யில் நிரந்தரம் செய்ய வேண்டும்.

ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு 100 சதவிகிதம் கட்டணமில்லா மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும்.

கூட்டுறவு வங்கிக் கடன்கள் மற்றும் அறநிலையத்துறை கோரிக்கைகள்

கூட்டுறவு வங்கிகளில் 75,000 ரூபாய் வரை பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப் படும் என்ற முதலமைச்சரின் அறி விப்பை வரவேற்ற செல்லசுவாமி, கூட்டு றவு வங்கிகளில் அதிகபட்சமாக 1.50 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படு வதால், அந்த முழுத் தொகையையும் (1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்) தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

கோவில் சொத்துக்கள் புனித நோக்கங்களுக்கு மட்டுமே பயன் படுத்தப்படும் என்ற அறிவிப்புக்கு விளக்கம் கோரிய அவர், கோவில் நிலங்களில் வாழ்வோர் மற்றும் சாகு படி செய்வோரின் நலன்கள் பாது காக்கப்பட வேண்டும் என்றார். குமரி மாவட்டத் திருக்கோவில்களில் 25 ஆண்டுகளுக்கும் மேலாகக் குறைந்த ஊதியத்தில் பணிபுரியும் 352 உட்துறை ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

நீட் தேர்வுப் போராட்ட ஒடுக்குமுறையும் சட்டம்-ஒழுங்கும்

தர்மபுரி மாவட்டத்தில் நீட் தேர்வு அழுத்தத்தால் மாணவி ரோஷினி தற்கொலை செய்துகொண்டதைச் சுட்டிக்காட்டிய அவர், நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி சென்னையில் போராடிய மாணவர்கள் மீது காவல்துறை நடத்திய கண்மூடித்தனமான தாக்குத லைக் கண்டித்தார். குறிப்பாக, மாண விகளை ஆண் காவலர்கள் கைப் பிடித்து இழுத்துக் கொடுமைப்படுத்திய விவகாரத்தில் முதலமைச்சர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டம் - ஒழுங்கு நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அதில் அரசு தனிக் கவனம் செலுத்தக் கோரினார். மேலும், பள்ளிக்கு அருகில் 100 மீட்டருக்குள் செயல்படும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்றும், விதிமீறும் கொள்கை முடிவு என்பதால் அர சின் கவனத்திற்குக் கொண்டு செல்வ தாகத் தெரிவித்தார். கூட்டுறவுச் சங்கங்களில் விவசாயிகள் பெற்று ள்ள கடன்களை முழுமையாகத் தள் ளுபடி செய்து புதிய அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று முதல மைச்சரிடம் நாங்கள் கோரிக்கை வைத்துள்ளோம் என்றார். செய்தியாளர் கேள்விக்கு பதி லளித்த அவர், “இது மூன்றாவது கட்டப் போராட்டம். தமிழ்நாடு முழு வதும் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் நடத்துகிறோம். தற் போது தலைமை அலுவலகத்தில் இந்தப் போராட்டத்தை நடத்து கிறோம். இதற்குப் பிறகும் அரசு செவிசாய்க்கவில்லை என்றால், தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து விவசாயிகள் அமைப்பு களையும் ஒன்றிணைத்து, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வரை தொடர் போராட்டத்தை முன்னெ டுப்போம்” என்றும் கூறினார். பி.எஸ். மாசிலாமணி தமிழக விவசாயிகள் சங்க மாநி லப் பொதுச்செயலாளர் பி.எஸ். மாசி லாமணி பேசுகையில், “முத லமைச்சர் இரண்டாவது முறையாக விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கடன் தள்ளுபடி அறிவிப்பை வெளியிட்டார். ஆனால், முத லமைச்சரின் கவனத்திற்குச் செல் லாத விஷயங்கள் இதில் இருப்ப தாக நாங்கள் கருதுகிறோம். குறிப் பாக, சிறு, குறு விவசாயிகள் பெற் றுள்ள கடன்கள் முழுமையாகவும், இதர விவசாயிகளுக்கு அவர்கள் பெற்ற கடனில் 50 விழுக்காடும் மட்டுமே தள்ளுபடி செய்துள்ளார் கள். கடந்த ஆண்டு வரை நிலுவை யில் உள்ள கடனைத் தள்ளுபடி செய்வோம் என்று தேர்தல் பிரச்சா ரத்தின்போது அறிவித்தார்கள். ஆனால், இப்போது ஒரு ஆண்டில் உள்ள கடன் மட்டுமே தள்ளுபடி என்று அறிவிக்கிறார்கள். ஆகவே, அறிவித்தபடி கடந்த ஆண்டு வரை நிலுவையில் உள்ள கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும். சிறு, குறு விவசாயிகள் எவ்வளவு கடன் பெற்றிருந்தாலும் ரூ. 75 ஆயிரம் மட்டுமே தள்ளுபடி என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. 5 ஏக்கர் நிலம் வைத்துள்ளவர்கள் சிறு, குறு விவ சாயிகள்; அவர்கள் 1.5 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்றிருப் பார்கள். அவர்களுக்கு முழுமை யாகக் கடனைத் தள்ளுபடி செய்யவில்லை. எனவே, தேர்தல் வாக்குறுதிப்படி தவெக அரசு அனைத்துச் சிறு, குறு விவசாயிகளுக்கும் இதுவரை நிலுவையில் உள்ள கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும். முத லமைச்சர் நேரடியாக விவசாயி களைச் சந்தித்து உண்மையை அறிய வேண்டும். அதிகாரிகளின் பேச்சை கேட்டு தள்ளுபடி அறிவிப்புகளை வெளியிடக்கூடாது. தமிழ்நாடு அரசு முறையான அறிவிப்பை வெளியி டும் வரை அனைத்துச் சங்கங்களும் இணைந்து போராட்டம் நடத்து வோம்” என்றார்.