தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சிபிஎம் எம்எல்ஏ ஆர்.செல்லசுவாமிக்கு உற்சாக வரவேற்பு

27 May 2026, 11:20 pm
சிபிஎம் எம்எல்ஏ ஆர்.செல்லசுவாமிக்கு உற்சாக வரவேற்பு
<p><strong>சிபிஎம் எம்எல்ஏ ஆர்.செல்லசுவாமிக்கு உற்சாக வரவேற்பு</strong></p><p>நாகர்கோவில், மே.27 - வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க சென்ற எம்எல்ஏ ஆர் .செல்லசுவாமிக்கு கிரீடம் மற்றும் சந்தன மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளித்தனர். தற்போது நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் பத்மநாபபுரம் தொகுதி வேட்பாள ராக மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஆர். செல்லசுவாமி போட்டியிட்டார். அதில் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற அவர் கடந்த ஐந்து நாட்களாக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கின்ற பிரச்சார பயணத்தை மேற்கொண்டள்ளார். ஐந்தாவது நாளான புதனன்று மதிய உணவிற்கு பின் தக்கலை வட்டார பகுதி யில் நன்றி தெரிவிக்கும் பிரச்சாரத்தை மேற் கொண்டார். அப்போது கல் குறிச்சி பகுதி யில் ஏராளமான பெண்கள் மற்றும் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டு சால்வை அணிவித்தும் வாழ்த்துக்கள் தெரிவித்தும் வரவேற்றனர். வட்டாரம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கிரீடம் மற்றும் சந்தன மாலை அணிவித்தும் இனிப்புகள் வழங்கியும் பட்டாசு வெடித்தும் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். இந்நிகழ்ச்சியில் சிபிஎம் மாநில குழு உறுப்பினர் லீமா றோஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.அண்ணாதுரை, எம்.அகமது உசேன், உஷா பாசி,, தங்க மோக னன், ஆர். ரவி, மாவட்ட குழு உறுப்பி னர்கள் புஷ்ப தாஸ், எம்.ரகுபதி, சகாய ஆண் றனி, குருந்தன்கோடு வட்டார செயலாளர் பா.ராஜு தக்கலை வட்டார செயலாளர் சுஜா ஜாஸ்பின், திமுக ஒன்றிய செயலாளர் அரு ளானந்தா ஜார்ஜ், சிபிஎம் நிர்வாகிகள் குமரே சன், ரத்தினகுமார் உட்பட திரளா னோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.