திருச்சேறை மக்களை சட்டவிரோதமாக அப்புறப்படுத்த நினைக்கும் அறநிலையத்துறை முதல்வர் கவனத்திற்குக்கொண்டு செல்லப்படும் - சிபிஎம் எம்எல்ஏ டி.லதா உறுதி
24 Sept 2026, 8:24 pm

திருச்சேறை மக்களை சட்டவிரோதமாக அப்புறப்படுத்த நினைக்கும் அறநிலையத்துறை முதல்வர் கவனத்திற்குக்கொண்டு செல்லப்படும் - சிபிஎம் எம்எல்ஏ டி.லதா உறுதி

கும்பகோணம், செப். 24 –தஞ்சாவூர் மாவட்டம், கும்ப கோணம் அருகே திருச்சேறை கிரா மத்தில் பல தலைமுறைகளாகக் குடியிருந்துவரும் ஏழை மக்களின் அடிமனையைப் போல ஆவணங்கள் மூலம் கோவிலுக்கு வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்ய வேண்டும் என்றுவலியுறுத்தி, தமிழ்நாடு அடிமனை பயனாளிகள், குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் சாரநாத பெருமாள் கோவில் எதிரில்காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்திற்குச் சங்கக் கிளைச் செயலாளர் டி.என்.ஆறுமுகம்தலைமை வகித்தார். கிளைத் தலைவர் ஜி.ராமமூர்த்தி, பொருளாளர் ரவி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்கீழ்வேளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், மாதர் சங்க மாநிலத் துணைச் செயலாளருமான டி.லதாபோராட்டத்தைத் தொடங்கிவைத்து கண்டன உரையாற்றினார்.

சட்டமன்ற உறுப்பினர் டி.லதா கண்டன உரைஅப்போது பேசிய டி.லதா எம்எல்ஏ, திருச்சேறையில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஐந்து தலைமுறைகளாக, அதாவது 100 வருடங்களுக்கு மேலாக நத்தம் புறம்போக்கு நிலத்தில் வசித்து வருவதாகக் குறிப்பிட்டார். அந்த நிலத்தைஅறநிலையத்துறை கோவிலுக்குச் சொந்தமானதாகச் சட்டவிரோதமாக மாற்றி, மக்களை அப்புறப்படுத்தமுயல்வதாக அவர் குற்றம்சாட்டினார்.

நூற்றாண்டுகளாக அங்கு வாழ்ந்துவரும் மக்களுக்கு இதுவரை எந்த நோட்டீசும் வழங்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டிய அவர், தனியார் இடத்தில் 12 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்களையே வெளியேற்றமுடியாது என்ற சட்டம் இருக்கும் போது, பல பத்தாண்டுகளாக வசிக்கும் மக்களை அப்புறப்படுத்துவது ஏற்புடையதல்ல என்றார்.

எனவே, இப்பிரச்சனையைத் தமிழக முதலமைச்சர், சம்பந்தப்பட்ட அமைச்சர் மற்றும் அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்று உரிய தீர்வு காண முயற்சி மேற்கொள்ள ப்படும் என்று அவர் உறுதியளித்தார்.

திரளான பொதுமக்கள் பங்கேற்புஇப்போராட்டத்தில் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் எஸ்.துரைராஜ், சிஐடியு மாநிலத் துணைத் தலைவர்சி.ஜெயபால், மாவட்டத் தலைவர் ஏ.செல்வம், மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் எம்.ராம், விவசாயிகள் சங்கமாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார், மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், ஒன்றியச் செயலாளர் எஸ்.பழனிவேல், வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர்வெங்கடேசன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.இப்போராட்டத்தில் திருச்சேறை கோபுர வாசல், கடைவீதி, கீழவீதி, மேலவீதி, கேப்டன் லட்சுமி தெரு மற்றும்மாரியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட மக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.