முந்தய பக்கம்

உடல் தானம் செய்த சிபிஎம் நிர்வாகிகள்!

10 Oct 2026, 11:22 pm
உடல் தானம் செய்த சிபிஎம் நிர்வாகிகள்!
<p><strong>உடல் தானம் செய்த சிபிஎம் நிர்வாகிகள்!</strong></p><p>கூடலூர், அக்.10-பந்தலூரில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 17 பேர் உடல் தானம் செய்தனர்.நீலகிரி மாவட்டம், பந்தலூர் ஏரியா கமிட்டிக்குட்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 17 பேர், தங்களது மறைவுக்குப்பிறகு முழு உடலையும் உதகை அரசு மருத்துவக்கல்லூரிமருத்துவமனைக்கு தானமாக வழங்குவதற்கான படிவத்தை சனியன்று மருத்துவக்கல்லூரி அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இந்நிகழ்ச்சிக்கு, சிபிஎம் ஏரியா செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் ராசி.ரவிக்குமார் முன்னிலை வகித்தார். ஏரியா கமிட்டி உறுப்பினர் அசைன் வரவேற்றார். இந்நிகழ்வில், கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் திராவிடமணி, சிபிஎம் மூத்த தலைவர் வாசு, மாவட்டச் செயலாளர் வி.ஏ.பாஸ்கரன்,செயற்குழு உறுப்பினர்கள் யோகண்ணன், ராஜன், வருவாய் கோட்டாட்சியர் குணசேகரன், துணை காவல் கண்காணிப்பாளர் கல்யாண் குமார், நெல்லியாளம் நகர்மன்ற தலைவர் சிவகாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சார்பில், உடற்கூறியல் துறை தலைவர் (பொ) இரா.அருண் பிரசாத், பேராசிரியர் ஜே.நிஷ்வின், ஆய்வக நுட்புநர்கள் மோனிஷா, கீர்த்தனா ஆகியோர் கலந்து கொண்டனர். மனித உடல் மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கு மிகவும் அவசியமானது. உடல் தானம் செய்வதன் மூலம் எதிர்கால மருத்துவர்களின் கல்விக்கும், மருத்துவ அறிவியல் வளர்ச்சிக்கும் பங்களிக்க முடியும். தங்களது மறைவுக்கு பிறகும், மனிதகுலத்திற்கு பயனளிக்கும் வகையில் முழு உடலையும் தானமாக வழங்க முன்வந்துள்ள 17 தோழர்களின் முடிவு, மனிதநேயத்தையும் சமூக அக்கறையையும் வெளிப்படுத்தும் உன்னதமான செயலாக அமைந்தது.</p>
Share
FacebookXWhatsAppTelegram