சிபிஎம் உறுப்பினர் கல்யாணசுந்தரம் மரணம்
27 Jan 2026, 3:28 pm
<p><strong>சிபிஎம் உறுப்பினர் கல்யாணசுந்தரம் மரணம்</strong></p>
<p>நாகப்பட்டினம்: கடந்த 10.1.26 அன்று வெனிசுலா ஜனாதிபதி கைது செய்யப் பட்டதை கண்டித்து, அமெரிக்க ஜனாதி பதி டிரம்பின் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் தமிழ்நாடு முழுவதும் நடை பெற்றது. அதனொரு பகுதியாக நாகப்பட்டி னம் மாவட்டம், நாகப்பட்டினம் தெற்கு ஒன்றியம் அகர ஒரத்தூர் கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற கட்சியின் அகர ஒரத்தூர் கிளைச் செயலாளர் தோழர் கல்யாணசுந்தரம் அந்த உருவ பொம்மை எரிக்கும் போது ஏற்பட்ட தீப்பிழம்பில் தீக்காயமடைந்து, நாகப்பட்டி னம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் திங்களன்று இரவு அகால மரணம் அடைந்தார். அன்னாரது இறுதி நிகழ்ச்சி புதன்கிழமை (ஜன.28) அகர ஒரத்தூரில் நடைபெறுகிறது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளரும், மாநிலக் குழு உறுப்பினருமான வி.மாரி முத்து, கீழ்வேளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் வி.சுப்பிரமணியன், பி.சுபாஷ்சந்திரபோஸ், ஏ.வடி வேல், ஏ.வேணு, ஒன்றியச் செயலாளர்கள் பாண்டியன், முத்தையன், ராஜா, ராஜகுரு, வெங்கடேசன், சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.ராஜேந்திரன், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ஜோதிபாசு, மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் முகேஷ்கண்ணா மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள் பங்கேற்ற னர். தோழர் கல்யாணசுந்தரத்தின் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பி னர் கே.பாலகிருஷ்ணன், கட்சியின் மாநிலச் செயலா ளர் பெ.சண்முகம் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ள னர்.</p>
