மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்
1 Jul 2026, 12:33 am
<p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்மாமியாரும், அக்கட்சியின் உறுப்பினர் பி. கீதாவின் தாயாருமான பி. பானுமதி அம்மாள், உடல்நலக் குறைவு காரணமாக சிதம்பரத்தில் உள்ள அவரது இல்லத்தில் திங்கள்கிழமை காலமானார். தகவலறிந்த சிபிஎம் கடலூர் மாவட்டச் செயலாளர் கோ. மாதவன், முன்னாள் மாநிலக்குழு உறுப்பினர் மூசா, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கருப்பையன், வாஞ்சிநாதன், ராஜேஷ்கண்ணன், அமர்நாத் மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள் ராஜா, ஆழ்வார், பக்கீரான் உள்ளிட்ட பலர் அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து, செவ்வாயன்று அண்ணாமலை நகர் பகுதியில் உள்ள இடுகாட்டில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.</p>
