கிராமங்களில் அடிப்படை வசதிகள் கோரி வீரபாண்டியில் சிபிஎம் நடைபயணம்
25 Feb 2026, 3:22 pm
<p><strong>கிராமங்களில் அடிப்படை வசதிகள் கோரி வீரபாண்டியில் சிபிஎம் நடைபயணம்</strong></p>
<p>விழுப்புரம், பிப். 25- விழுப்புரம் மாவட்டம், வீரபாண்டியில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 5-வது கட்டமாக நடைபயணமாகச் சென்று காத்தி ருக்கும் போராட்டம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்க ளில் அடிப்படை வசதிகள் மற்றும் வாழ்வா தாரக் கோரிக்கைகளான வீரபாண்டியில் தேசிய வங்கி கிளையைத் தொடங்க வேண்டும், தண்டரை–அடுக்கம் வனப்பகுதி யில் சாலை அமைக்க வேண்டும், வீர பாண்டி–ஒட்டம்பட்டு–கண்டாச்சிபுரம் சாலையை அகலப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட உள்ளது. மேலும், அருணா புரம் டி.எம். கால்வாயில் புலிக்கல் இணைப்புச் சாலையைப் புதுப்பிக்க வேண்டும், தினசரி ஆற்றுக்குடிநீர் வழங்கு வதை உறுதிப்படுத்த வேண்டும், புலிக்கல் கிராமத்தைப் புதிய ஊராட்சியாக அறி விக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை அத்துடன், வீரபாண்டியில் இடிக்கப்பட்ட தோழர் என். மாரி சமூகக் கூடத்தை அதே இடத்தில் நவீன வசதிகளுடன் புதிய சமுதாயக் கூடமாக அமைக்க வேண்டும், அனைவருக்கும் 125 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் தொடர்ந்து வேலைவாய்ப்பு வழங்க வேண்டும், இந்த வேலை கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக 100-நாள் வேலை தற்போது 6-நாள் வேலையாக இங்கு மாறிக்கிடக்கிறது, ஆனால் அப்போதும் கூலி பாக்கி தொடர்ந்து கொண்டே இருக்கிறது. மேலும், 122 எண் சென்னை பேருந்து, டி-26 தண்டரை பேருந்து அதே வழித்தடத்தில் காலை, மாலை சென்று வருவதை உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி புதன்கிழமை (பிப்.25) ஒட்டம்பட்டு முதல் அருணாபுரம் வழியாக வீரபாண்டி வரை நடந்து சென்று நடைபெற்ற காத்திருக்கும் எழுச்சியான போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர்கள் வீரபாண்டி எஸ்.சையத் ஜஹாங்கீர், ஒட்டம்பட்டு ஜி. செந்தில், தண்டரை என். செந்தில்முருகன், அருணாபுரம் டி. கார்த்தி கேயன், அருணாபுரம் எஸ். சுப்பிரமணி, அருணாபுரம் டி.எம். கே. வீரன் ஆகியோர் தலைமை தாங்கினர். போராட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ ஆர்.ராமமூர்த்தி, மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ். வேலுமாறன், வட்டச் செய லாளர் எஸ். கணபதி, மூத்த உறுப்பினர் வி.உதயகுமார், மாவட்டக் குழு உறுப்பி னர்கள் ஆர்.தாண்டவராயன், எம். முத்துவேல் ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகளைச் செயல்படுத்த வலி யுறுத்திப் பேசினர். போராட்டத்தில் வட்டக் குழு உறுப்பினர்கள் ஏ.ஆர்.கே. தமிழ்ச் செல்வன், வே. உமாமகேஸ்வரி, ஏ. ஏழு மலை, எம். பழனி, டி. குப்பன், எம். ராம லிங்கம், வி. தீர்த்தமலை, எஸ். அருள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டு கோரிக்கை களை உடனடியாக அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்திக் கோஷங் களை எழுப்பினர்.</p>
