தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மக்களின் மனங்களை வென்றதும் வெல்ல வேண்டியதும் சிபிஎம் மக்கள் சந்திப்பு பிரச்சார கள அனுபவம் - பெரணமல்லூர் சேகரன்

2 Sept 2026, 8:59 pm
மக்களின் மனங்களை வென்றதும் வெல்ல வேண்டியதும் சிபிஎம் மக்கள் சந்திப்பு பிரச்சார கள அனுபவம் - பெரணமல்லூர் சேகரன்

மக்களின் மனங்களை வென்றதும் வெல்ல வேண்டியதும் சிபிஎம் மக்கள் சந்திப்பு பிரச்சார கள அனுபவம் - பெரணமல்லூர் சேகரன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநிலக்குழு முடிவின்படிபட்டிதொட்டி யெங்கும் மக்கள் சந்திப்பு இயக்கம் ஆகஸ்ட் 26 முதல் 31 வரை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.அதன் ஒரு பகுதியாக திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் வட்டாரத்தில் நடைபெற்றமக்கள் சந்திப்பு இயக்கத்தின் கள அனுபவங்கள் மிகவும் வித்தியாசமானதாகவும், உத்வேகம்ஊட்டுவதாகவும் அமைந்திருந்தன. கடந்த ஆறு நாட்களாக நடைபெற்ற இந்தச் சந்திப்புகள் எளிய மக்களின் வாழ்க்கைத் துயரங்களையும், ஆட்சியாளர்களின் அலட்சியங்களை யும் வெளிச்சமிட்டுக்காட்டிய அதேவேளையில், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மீது மக்கள் வைத்துள்ள அசைக்க முடியாதநம்பிக்கையையும் வெளிச்சம் போட்டுக் காட்டின.

நம்பிக்கையும் தீர்க்கப்படாத கோரிக்கைகளும்

ஆகஸ்ட் 26 அன்று மாணிக்கமங்கலம், எட்டித்தாங்கல் கிராமங்களில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போது மக்களின் ஆதங்கம் ஒருபுறம் இருக்க, மார்க்சிஸ்ட் கட்சியின் மீதான நம்பிக்கை மறுபுறம் பலமாக இருப்பதைக் காண முடிந்தது. மாணிக்கமங்கலம் கிராமத்திலிருந்து மழையூர் செல்லும் ஒற்றையடிப்பாதையில் பல்லாண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்பை அகற்றி ஜல்லி சாலை அமைக்க சிபிஎம் போராடியதை மக்கள் நினைவு கூர்ந்தனர். தற்போது அதைத் தார்ச்சாலையாக மாற்ற கட்சி முயற்சித்து வருவது “கம்யூனிஸ்ட் கட்சியால் மட்டுமே முடியும்” என்ற நம்பிக்கையைத் தந்துள்ளது. அதேநேரத்தில், மக்கள் சொந்தப் பணத்தில் கட்டிய நியாய விலைக் கடைக்கு மின் இணைப்பு பெற வட்டாட்சியர் ஆட்சேபனை இல்லாச் சான்று மறுப்பதால் மக்கள் சிரமப்படு

கின்றனர். அந்தக் கட்டிடம் நீர்நிலை புறம்போக்கில் அமைந்திருப்பதே இதற்குக் காரணம். அப்பகுதியில் பட்டியலினத்தவர் 42 குடும்பங்கள் நீர்நிலை புறம்போக்கில் வசித்து வருவதால் பட்டா பெற முடியாமல் தவிக்கின்றனர். இத்தனைச் சிக்கல்களுக்கு மத்தியிலும் அந்த மக்களின் ஒரேநம்பிக்கை நட்சத்திரமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விளங்கி வருகிறது.

பேருந்து கோரிக்கையும் சந்தை வெற்றியும்

ஆகஸ்ட் 27 அன்று மாநிலக்குழு உறுப்பினர் எம்.சிவக்குமார் பங்கேற்புடன் தாடிநொளம்பை கிராமத்தில் மக்கள் சந்திப்பு நடைபெற்றது. கொள்முதல் செய்த நெல்லுக்கு லட்சக்கணக்கில் நிலுவையில் இருந்த பணத்தைப் போராடிப் பெற்றுத் தந்ததை விவசாயிகள் நினைவுகூர்ந்தனர். அதே நேரத்தில், ஐந்தாண்டுகளாக நின்றுபோன நகரப் பேருந்தை இயக்கக் கட்சி தொடர்ந்து போராட வேண்டும் என உரிமையுடன் கோரிக்கை வைத்தனர். கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரிய அட்டை பெறப்படாத நிலையை உணர்ந்து, சிஐடியு அமைப்பைக் கட்டும் பணி தோழர்களின் கவனத்தை ஈர்த்தது. ஆகஸ்ட் 28 அன்று பெரணமல்லூர் பேரூராட்சியில் நடைபெற்ற இயக்கத்தில், மார்க்சிஸ்ட் கட்சியின் 1-வது வார்டு உறுப்பினர் மா.கௌதம்முத்துவின் முயற்சியால் பல ஆண்டுகளுக்குப் பிறகு சந்தை உருவானதை மக்கள் பாராட்டினர். மேலும், நூறுநாள் வேலைத் திட்டத்தைத் தொடர்ந்து நடத்திடவும், வேளாண்மைக் கல்லூரி ஏற்படுத்தவும் இளைஞர்கள் கோரிக்கை விடுத்தனர்.

நில மீட்பும் நூறுநாள் வேலைப் போராட்டமும்

ஆகஸ்ட் 29 அன்று அரியபாடி கிராமத்தில், எட்டு வழிச்சாலைத் திட்டத்திலிருந்து விவசாய நிலங்கள் மீட்கப்பட்டதையும், பழங்குடியினருக்காக வீடு கட்டி ‘தோழர் சங்கரய்யா நகர்’ எனப் பெயரிடப்பட்டதையும் மக்கள் நன்றியுடன் நினைவு கூர்ந்தனர். பெரணமல்லூர் ஒன்றியத்துடன் தங்கள் கிராமங்களை இணைக்கச் செய்த போராட்ட வெற்றியைப் பாராட்டிய அதே நேரத்தில், பெரிய ஏரி கால்வாய் தூர்வாரப்பட்டதைச் சுட்டிக்காட்டினர். மேலும், சுடுகாட்டுப்பாதை மற்றும் பள்ளிக் கட்டிடக் கோரிக்கைகளையும் முன்வைத்தனர். ஆகஸ்ட் 30 அன்று சத்திரம்பாடி கிராமத்தில் நூறுநாள் வேலை செய்யும் மக்கள், “இந்தத் திட்டத்தை ஒழிக்கப் பாக்குறாங்க. விட்றாதீங்க, நாங்க வர்றோம்” என்று தங்களின் உரிமைக்காகப் போராடத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தனர்.

நிறைவான கள அனுபவம்

ஆகஸ்ட் 31 நிறைவு நாளன்று மாவட்டச் செயலாளர் ப.செல்வன் பங்கேற்புடன் ரெட்டிக்கு

ப்பம் கிராமத்தில் இயக்கம் நடைபெற்றது. அங்கு 5 பழங்குடியினர் குடும்பங்களுக்கு வீட்டுமனை பெற்று வீடுகள் கட்டப்பட்டு ‘அன்னை கே.பி.ஜானகியம்மாள் நகர்’ திறக்கப்பட்டது. மேலும், 36 குடும்பங்களுக்கான வீட்டுமனைப் பட்டாவை அளவீடு செய்து தராமல்நிலுவையில் உள்ளதைச் சுட்டிக்காட்டி கோரிக்கை வைக்கப்பட்டது. கட்சியின் ரெட்டிக்குப்பம்கிளை கூடி போராட்டத்திற்குத் திட்டமிட இவ்வியக்கம் தூண்டுகோலாய் அமைந்தது.

மொத்தத்தில் ஆறு நாட்கள் நடைபெற்ற மக்கள் சந்திப்பு இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்குப் பெரும் உற்சாகத்தைத் தந்ததுடன், மக்களின் கோரிக்கைகளை வெல்ல போராட்டங்களைத் திட்டமிடவும் உந்துசக்தியாக அமைந்தது. ஏற்கெனவே கட்சியின் மீதுள்ள நம்பிக்கையை மேலும் வலுப்படுத்த வேண்டிய தேவையை இந்த இயக்கம் உணர்த்தியுள்ளது. ஒன்றிய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டிய மக்கள் கோரிக்கைகளுக்காகவும், செங்கொடியின் கீழும் தொடர்ந்து அணிதிரள இந்தச் சந்திப்பு களம் அமைத்துத் தந்துள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.