தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மதுராந்தகம் தொகுதியில் சிபிஎம் வேட்பாளர் போட்டி வைப்புத்தொகை வழங்கிய சிபிஎம் கிளை, செம்மலர் குழு, வாலிபர் சங்கத்தினர்!

yesterday
மதுராந்தகம் தொகுதியில் சிபிஎம் வேட்பாளர் போட்டி வைப்புத்தொகை வழங்கிய சிபிஎம் கிளை,  செம்மலர் குழு, வாலிபர் சங்கத்தினர்!

மதுராந்தகம் தொகுதியில் சிபிஎம் வேட்பாளர் போட்டி வைப்புத்தொகை வழங்கிய சிபிஎம் கிளை, செம்மலர் குழு, வாலிபர் சங்கத்தினர்!

கோயம்புத்தூர், செப். 14 -மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் இடதுசாரிக் கட்சிகள் சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுவது, கட்சியினரிடையே, பெரும் வரவேற்பைஏற்படுத்தியுள்ளது. வேட்புமனுவுக் கான வைப்புத்தொகை, தேர்தல் செலவுகளுக்கு கட்சி அணிகள் கிளை அளவில், உற்சாகமாக நிதி வழங்கி வருகின்றனர்.

கோவை மாவட்டம் பீளமேட்டில், மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் கலந்துகொண்ட விழாவில் சிபிஎம்வேட்பாளர் போட்டியிடும் அறிவிப்பை வெளியிட்டதுமே, உடனடியாக ரூ. 1 லட்சம் வரை நிதிதிரண்டது.செங்கல்பட்டுஇந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கல்பட்டு மாவட்டக் குழு கூட்டம், திங்களன்று நடைபெற்ற நிலையில், கட்சியின் மாவட்டசெயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட குழு உறுப்பினர்கள் வர்க்க வெகுஜன அமைப்பின் தலைவர்கள் தேர்தல்நிதியாக ரூ. 1 லட்சத்து 50 ஆயிரத்தை கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகத்திடம் வழங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். கண்ணன், மாவட்டச் செயலாளர் ப.சு.சேலம் கன்னங்குறிச்சி கிளைகட்சியின் சேலம் தாலுகா கன்னங்குறிச்சி கிளை சார்பில், திங்களன்று மாநில செயற்குழு உறுப்பினர் செ.முத்துக்கண்ணனிடம் ரூ. 10 ஆயிரம் நிதியை மாவட்டச் செயலாளர் ஏ. ராமமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் என். பிரவீன்குமார், பேரூராட்சி கவுன்சிலர் பி. தேவி, முத்த

தோழர் கே.எஸ். பழனிசாமி உள்ளிட் டோர் வழங்கினர்.

செம்மலர் குழு -வாலிபர் சங்கம்இதேபோல திருப்பூர் மாவட்டம் இடுவாய் ஊராட்சியின் ‘செம்மலர் குழு’சார்பில் ரூ. 5 ஆயிரம் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே. காமராஜிடம் வழங்கப்பட்டது. அத்துடன் இடுவாய் மற்றும் 63. வேலம்பாளையம் ஊராட்சிஇந்திய ஜனநாயக வாலிபர் சங்க கிளைகளின் சார்பில் தேர்தல் நிதியாக ரூ. 5 ஆயிரம் வழங்கப்பட்டது. மாவட்டசெயலாளர் சி. மூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. ரங்கராஜ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கே. கணேசன்,பா. சவுந்தரராசன், ஆர். மைதிலி, சீராணம்பாளையம் கிளைச்செயலாளர் கே. ஈஸ்வரன், பாரதிபுரம் கிளைச் செயலாளர் ஏ.கே. ராமமூர்த்தி, அ.ப. பாலசுப்பிரமணி, வாலிபர் சங்க நிர்வாகிகள் ஜி. சிந்தன், ஆர்.தினேஷ், கட்சி உறுப்பினர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.