சிபிஎம் உள்ளாட்சி உறுப்பினர்களின் ஆதங்கக் குரல்! - ஆர். மணிமேகலை
42 minutes before

சிபிஎம் உள்ளாட்சி உறுப்பினர்களின் ஆதங்கக் குரல்!

சிபிஎம் மாமன்ற உறுப்பினர்

திருப்பூர் மாநகராட்சி53-வது வார்டு மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி மாமன்றஉறுப்பினர் ஆர் மணிமேகலதனது வார்டின் வளர்ச்சிப்பணிகள்மற்றும் நிலுவையில்உள்ள பிரச்சினைகள் குறித்து கூறியதாவது:

“கடந்த நான்கரை ஆண்டுகளில் எங்கள் வார்டில் 90 சதவீத சாலைப் பணிகள்முடிக்கப்பட்டுள்ளன. 12 நாட்களுக்கு ஒருமுறைவந்துகொண்டிருந்த குடிநீர், தற்போது 4 நாட்களுக்குஒருமுறை சீராக வழங்கப்படுகிறது. இருப்பினும், மாநகராட்சியின் நிதி ஒதுக்கீடு இல்லாததால் பல முக்கிய அடிப்படை பணிகள் முடங்கி கிடக்கின்றன. குறிப்பாக, கடந்த ஆறு மாத காலத்தில் ஒரு பைசா கூட நிதி ஒதுக்கப்படாததால் எந்த பணியும் நடைபெறவில்லை.

முன்னாள் வீரபாண்டி ஊராட்சி பகுதிகளான 53, 54, 57 ஆகிய வார்டுகளில் ஐந்து ஆண்டுகளாக கோரிக்கைவிடுத்தும் பாதாள சாக்கடைத் திட்டம் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. பல்லடம் ரோடு நொச்சிப்பாளையம் பிரிவில் கழிவுநீர் வடிகால் வசதியும், டி.கே.டி மில் முதல் தமிழ்நாடு தியேட்டர் வரை வடிகால் அமைக்கும் பணியும் கிடப்பில் உள்ளன. இது குறித்து அமைச்சர்ஆதவ் அர்ஜுனா மற்றும் முதல்வரின் தனிப்பிரிவிலும் மனு அளிக்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர் நகரில் மேல்நிலை குடிநீர் தொட்டி அமைக்கவும் வலியுறுத்திவருகிறோம்.

குப்பாண்டம்பாளையம் சமுதாய நலக்கூடத்திற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் நிதியிலிருந்து ரூ.15 லட்சத்தில் கொட்டகை (ஷெட்) அமைக்கப்பட்டது. ஆனால், கழிப்பிடம், தண்ணீர் வசதிமற்றும் முழுமையான பராமரிப்பு இல்லாததால் அதுபயனற்றுக் கிடக்கிறது. 15 ஆண்டுகளாகப் பராமரிக்கப்படாத குப்பாண்டம்பாளையம் பள்ளி, சுண்டமேடு அம்பேத்கர் நகர் மற்றும் சமுதாய நலக்கூடத்தின் பின்புறம் உள்ள பொதுக் கழிப்பிடங்கள் சீரமைக்கப்பட வேண்டும்.

மேலும், வார்டில் அமைக்கப்பட்ட 250 தெரு விளக்குகளில், 100 விளக்குகளுக்கு இன்னும் மின்இணைப்பு வழங்கப்படவில்லை. மாமன்ற கூட்டங்களில் தொடர்ந்துவலியுறுத்தியும், மேயர் மற்றும் ஆணையாளரிடம் 8 முறை கடிதம் கொடுத்தும் உரிய நடவடிக்கைஎடுக்கப்படவில்லை. முன்னாள் மேயர் தினேஷ்குமார், பொறுப்பு மேயர் ஆர். பாலசுப்ரமணியம் ஆகியோர் நேரில் ஆய்வுசெய்து சில பணிகளை செய்து கொடுத்தாலும், முக்கிய பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் உள்ளன.

சொத்து வரி, குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை வைப்புத் தொகை உயர்வுக்கு எதிராக எங்கள் கட்சி தொடர்ந்துகுரல் கொடுத்து வருகிறது. எனவே, தமிழக அரசு மாநகராட்சிக்கு உரிய நிதியை உடனடியாக ஒதுக்கி, வார்டு வளர்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார்.

திருமுருகன்பூண்டி நகராட்சியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்

திருமுருகன்பூண்டி நகராட்சிப் பகுதிகளில் வடிகால், சாலை, குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதுடன், பொதுமக்களின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்என 10-வது வார்டு உறுப்பினர் சுப்பிரமணியம், 14-வது வார்டு உறுப்பினர் தேவராஜன் ஆகியோர் வலியுறுத்தினர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்10-வது வார்டு உறுப்பினர் சுப்பிரமணியம் கூறுகையில், 10-வது வார்டு மெயின்ரோட்டில் சென்டர் மீடியனில் அமைக்கப்பட்டுள்ள பெரும்பாலான சோலார்தெருவிளக்குகள் பல மாதங்களாக எரி

யாமல் உள்ளன. அவற்றை சீரமைக்க வேண்டும். பப்பீஸ் ஹோட்டல் முதல்

அணைப்புதூர் வரை நகராட்சி எல்லைவரை புதிதாக தெருவிளக்குகள் அமைக்கவேண்டும்.மயானத்தின்சுற்றுச்சுவர் மற்றும் கதவுகள் சேதமடைந்துள்ளதால் அவற்றை புதுப்பித்து முறையாக பராமரிக்க வேண்டும். நகராட்சி முழுவதும் உள்ள பூங்காக்களை சுத்தம் செய்து விளையாட்டு உபகரணங்கள் அமைத்து மக்கள் பயன்பாட்டுக்குக்கொண்டுவர வேண்டும் என்றார்.மேலும், குடிநீர் வசதி இல்லாத குடியிருப்புப் பகுதிகளில் ஆழ்துளைக் கிணறு அமைத்து தண்ணீர் வழங்க வேண்டும். இரண்டாவது குடிநீர் திட்டத்தின் பிரதான குழாயிலிருந்து கூடுதல் இணைப்பு ஏற்படுத்தி துரைசாமி நகர் மேல்நிலை தொட்டிக்கு தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும். இதன்மூலம் பூண்டி பகுதியில் உள்ள எட்டுவார்டுகளுக்கும் சீரான குடிநீர் விநியோகம் செய்ய முடியும். குடிநீர் குழாய்கள்மற்றும் வால்வுகளில் ஏற்படும் கசிவுகளை உடனடியாகச் சரி செய்ய போதுமான பணியாளர்களை நியமிக்க வேண்டும். நல்லாற்றின் கரையோரங்களிலும், பாலத்தின் இருபுறங்களிலும் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும். பழைய நகராட்சி அலுவலகம் முன்புள்ள குழிகளைச் சமப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

பப்பீஸ் ஹோட்டலின் மேற்குப் பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி மட்டும் நிலுவையில் உள்ளது. கழிவுநீர் வெளியேற்றுவதற்கான வழித்தடம் இல்லாததால் பணி நிறுத்தப்பட்டுள்ளது. தனியார் இடத்தின் உரிமையாளரிடம் பேசி வழித்தடம் ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணி நிறைவடைந்தால் வார்டின்எஞ்சியஅடிப்படை வசதிகளும் பூர்த்தியாகும் என்றார்.

நகராட்சியில் நிரந்தர அதிகாரிகள் நியமிக்கப்படாமல் பெரும்பாலும் பொறுப்பு அதிகாரிகளே நியமிக்கப்படுவதால் பணிகளில் தொய்வு ஏற்படுகிறது.

14-வது வார்டு சிபிஎம் நகர்மன்ற உறுப்பினர் தேவராஜன் கூறுகையில், சிவசக்திநகர் முழுவதும் வடிகால் வசதி ஏற்படுத்தவேண்டும். குறிஞ்சி நகர், உமையஞ்செட்டிபாளையம், ராமநாதபுரம் உள்ளிட்டபகுதிகளில் வடிகால் மற்றும் சாலை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். 20-க்கும்மேற்பட்ட புதிய தெருவிளக்குகள் அமைக்கவேண்டும். சாலைகளின் இருபுறங்களிலும்மண்டிக்கிடக்கும் புதர்களை அகற்ற வேண்டும் என்றார்.

அம்மாபாளையம் பகுதியில் கடந்த ஆட்சி காலத்தில் நிறுத்தப்பட்டிருந்த மாநகராட்சி குப்பைகள் கொட்டும் நடவடிக்கை, தற்போதைய ஆட்சி காலத்தில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. நகராட்சி குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு சுகாதாரமான முறையில் கையாளப்படும் நிலையில், மாநகராட்சி குப்பைகள் கொட்டப்படுவதால் பொதுமக்களுக்கு சுவாசக் கோளாறு, குடிநீர் பாதிப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எனவே, அங்கு மாநகராட்சி குப்பைகள் கொட்டுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

நகராட்சியில் நிரந்தர அதிகாரிகள் நியமிக்கப்படாமல் பெரும்பாலும் பொறுப்பு அதிகாரிகளே நியமிக்கப்படுவதால் பணிகளில் தொய்வு ஏற்படுகிறது. நிரந்தர அதிகாரிகளை நியமிக்க வேண்டும். வரி வசூல் மையத்தில் பொதுமக்களின் குறைகளை கேட்டறிய அதிகாரிகளை நியமிக்க வேண்டும் அல்லது புகார் பெட்டி, குறுஞ்செய்தி மூலம் புகார் தெரிவிப்பதற்கு தொலைபேசி எண் ஆகியவற்றை ஏற்படுத்த வேண்டும். கடந்த ஐந்து ஆண்டுகளாக பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்டு வந்தஈமக்காரிய உதவித்தொகை வழங்கப்படாமல் உள்ளது. அதனை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.மேலும், தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமைந்தகடந்த ஆறு மாதங்களில் நகராட்சி நிதி ஒதுக்கீட்டில்பணிகள் எதுவும் நடைபெறவில்லை. பொது நிதியிலிருந்தே சிறிய அளவிலான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை இரண்டு நகர்மன்ற கூட்டங்கள் மட்டுமேநடைபெற்றுள்ளன. எனவே, நகராட்சிக்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்து வளர்ச்சிப் பணிகளை விரைவுபடுத்தவேண்டும் என இரு உறுப்பினர்களும் வலியுறுத்தினர்.

தளி பேரூராட்சியில் முடங்கிக்கிடக்கும் நலத்திட்டங்கள்

உடுமலைப்பேட்டை வட்டம், தளி பேரூராட்சிக்கு கடந்த ஆறு மாதங்களாக தமிழக அரசுபோதிய நிதி ஒதுக்கீடு செய்யாததால், நிர்வாகப் பணிகளும், பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் பணிகளும் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

தளி பேரூராட்சிக்கு உட்பட்ட திருமூர்த்திமலை, குரு

மலை உள்ளிட்ட மலைவாழ் மக்கள் குடியிருப்புகளில் உள்ள வீடுகள் மிகவும் சேதமடைந்துள்ளன. அடிப்படை வசதிகள் முழுமையாக கிடைக்காத நிலை நீடிக்கிறது. திருமூர்த்திமலை அடிவாரத்திலிருந்து குருமலைக்குச் செல்லும் சாலை அமைக்க ரூ.49 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும், வனத்துறையின் தடையால் அப்பணி பாதியிலேயே முடங்கியுள்ளது.

கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தை பேரூராட்சி பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். இலவசவீட்டுமனைப் பட்டா வழங்குவதுடன், இளைஞர்களுக்கு விளையாட்டு மைதானம் அமைக்க நிலம் ஒதுக்க வேண்டும். சாலையோர வியாபாரிகளை கணக்கெடுத்து அடையாள அட்டை மற்றும் வங்கிக் கடன்வழங்க வேண்டும். மலைவாழ் மக்கள் குடியிருப்புகளுக்கு மின்கம்பங்கள் அமைத்து மின்சாரம் வழங்குவதுடன், குடிநீர்வசதிமற்றும் சமுதாய நலக்கூடம் அமைத்துத்தரவேண்டும். திருமூர்த்திமலை அணையில் படகுத் துறையை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுகுறித்து தளி பேரூராட்சிதுணைத் தலைவர் செல்வன்கூறுகையில்,உடுமலைப்பேட்டை வட்டத்தில் உள்ளகுருமலை, திருமூர்த்தி மலை இந்த இரண்டுமலைவாழ் மக்கள்பகுதிகளும் தளி பேரூராட்சியின் வார்டுகளாக உள்ளன. தளி பேரூராட்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், குருமலை 16 வது வார்டு உறுப்பினர் செல்வன் பேரூராட்சி துணைத் தலைவராக செயல்பட்டு வருகிறார். அதேபோல் திருமூர்த்தி மலை 17 வது வார்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக வாணிஸ்வரி உள்ளார். பேரூராட்சி நிர்வாகம் பொறுப்பேற்ற நாளே கால் ஆண்டு காலத்தில் தனி பேரூராட்சி முழுவதும் தார் சாலைகள், காஙகிரீட் சாலைகள், வடிகால் வசதி,புதிய குழாய்கள் அமைப்பது ஆகியபணிகளை செய்து இருக்கிறோம். அதேபோல் குறுமலையில் பைப் லைன் வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. திருமூர்த்திமலையில் பைப் லைன், தெரு விளக்கு வசதி, பிசி ரோடுவசதி 200 மீட்டர் தொலைவிற்கு அமைக்கப்பட்டுள்ளது.  எனினும் தமிழக வெற்றிக்கழக அரசு மாநிலத்தில் பொறுப்பேற்ற இந்த ஆறு மாத காலத்தில் எந்த வேலையும் நடக்கவில்லை. இதன்காரணமாக மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்க இயலாத நிலை உள்ளது என்றார்.