தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்டுவோருக்கு நிதியை விடுவிக்க முதல்வருக்கு சிபிஎம் கடிதம்

11 Jun 2026, 11:22 pm
கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்டுவோருக்கு  நிதியை விடுவிக்க முதல்வருக்கு சிபிஎம் கடிதம்

கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்டுவோருக்கு நிதியை விடுவிக்க முதல்வருக்கு சிபிஎம் கடிதம்

திருப்பூர், ஜூன் 11 – திருப்பூர் மாவட்டத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்டிக் கொண்டிருக்கும் பயனாளிகளுக்கு வழங்க வேண்டிய நிதி ஒரு தவணை கூட வழங்கப்படவில்லை.

எனவே, தமி ழக முதலமைச்சர் தலையிட்டு நிதியை விடுவிக்க உத்தரவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் சி. மூர்த்தி கடிதம் எழுதி உள்ளார். இது தொடர்பாக வியாழனன்று தமி ழக முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்க்கு, சிபிஎம் மாவட்டச்செயலாளர் சி.மூர்த்தி எழுதிய கடிததத்தில், குடிசை இல்லா தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு வீடற்ற ஏழை, எளிய மக்கள் மற்றும் குடிசைகளில் வசித்து வருபவர்களுக்கு, தங்கள் சொந்த பட்டா இடத்தில் காங்கிரீட் வீடு கட்டிக் கொள்ள ரூ.3.50 லட்சம் நிதியுதவி வழங்குவதாக கடந்த 2024ஆம் ஆண்டு தமிழக அரசு அறிவித்தது.

கலைஞர் கனவு இல்லம் என்ற பெயரில் அறி விக்கப்பட்ட இத்திட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றி யங்களில் 300-க்கும் மேற்பட்ட பயனாளி கள் கிராமப்புறங்களில் தேர்வு செய்யப் பட்டனர். இவர்கள் வீடு கட்டிக் கொள்ள பணி ஆணை மற்றும் நிர்வாக அனுமதி கொடுக்கப்பட்டது. இ

தன் அடிப்படை யில் இந்த ஏழை, எளிய மக்கள் வீடு கட்டும் பணியைத் தொடங்கினர். பெரும் பாலும் கூலித் தொழிலாளர்களாக இருக்கும் இவர்கள், ஏற்கனவே வசித்து வந்த இடத்தில், பழைய வீடுகளை இடித்துவிட்டு புதிய காங்கிரீட் வீடுகளை கட்டத் தொடங்கினர். பலர் பேஸ் மெண்ட், சுற்றுச்சுவர், லிண்டல், மேல் கூரை காங்கிரீட் வரை என பணிகளைச் செய்துள்ளனர்.

இத்திட்டத்தில் வீடு கட்டுவோ ருக்கு நான்கு தவணைகளாக நிதி விடுவிக்கப்படும் என தெரிவிக்கப்பட் டது. எனினும் திட்ட நிதியில் இதுவரை ஒரு தவணை கூட நிதி வழங்கப்பட வில்லை.

இதனால் பொருளாதார நிலை யில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த பய னாளிகள் மிகவும் நெருக்கடியில் உள்ள னர்.

குறிப்பாக ஏற்கனவே குடியிருக் கும் வீடுகளையும் இடித்து, புதிய வீடுக ளும் முழுமை அடையாத நிலையில், மழைக்காலம் தொடங்கியுள்ளதால் குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்ட குடும்பத்தாருடன் அவதிப்பட்டு வரு கின்றனர்.

எனவே, தமிழக முதலமைச்சர் அவர்கள் இவ்விஷயத்தில் நேரடி கவ னம் செலுத்தி, மேற்கண்ட பயனாளிக ளுக்கு வழங்க வேண்டிய திட்ட நிதியை உடனடியாக விடுவிக்க உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.