சிதம்பரம் நேரு நகர் மக்கள் வீடு காலி செய்வதற்கு எதிர்ப்பு சிபிஎம் தலைமையில் ஆட்சேபனை மனு
19 Nov 2025, 3:33 pm
<p><strong>சிதம்பரம் நேரு நகர் மக்கள் வீடு காலி செய்வதற்கு எதிர்ப்பு சிபிஎம் தலைமையில் ஆட்சேபனை மனு</strong></p>
<p>சிதம்பரம், நவ.19- சிதம்பரம் நகரத்திற்கு உட்பட்ட 33வது வார்டு நேரு நகரில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். இவர்கள் வசிக்கும் பகுதி அரசு மருத்துவமனைக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு இடம் என்றும் இதனைக் காலி செய்ய வேண்டும் என தனிநபர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனையடுத்து கடந்த வாரம் அப்பகுதி யில் வசிக்கும் பொதுமக்களிடம் வருவாய் துறை சார்பில் வீடுகளைக் காலி செய்வது குறித்து கடிதம் வழங்கினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிபிஎம் நகர செயலாளர் ராஜா தலைமையில் நகர்மன்றத் துணைத்தலை வர் முத்துக்குமரன் உள்ளிட்ட கட்சியினர், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சிதம்பரம் சார்ஆட்சியரை அவரது அலுவலகத்தில் சந்தித்து ஆட்சேபனை மனு அளித்தனர். அதேபோல் சிதம்பரம் வட்டாட்சியரையும் சந்தித்து மனு அளித்துள்ளனர். அப்பகுதி மக்கள் கூறுகையில், அரசு மருத்துவமனை சுற்றுச்சுவருக்கு வெளியே உள்ள இடத்தில் கடந்த 40 ஆண்டு களுக்கு மேலாக வீடு கட்டி குடியிருந்து வருவதாகவும், இப்பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரும் கூலித் தொழி லாளர்கள் என்றும், தங்களால் மருத்துவ மனைக்கு எந்த இடையூறும் இல்லை என்றும், எங்களைக் காலி செய்ய வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் சிலர் செயல்படுகிறார்கள் என்றும் கூறினர். எனவே அதே இடத்தில் நிரந்தரமாக குடி யிருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
