முந்தய பக்கம்

பட்டா கோரி சிபிஎம் தலைமையில் மனு

4 Nov 2026, 12:04 am
பட்டா கோரி சிபிஎம் தலைமையில் மனு
<p><strong>பட்டா கோரி சிபிஎம் தலைமையில் மனு</strong></p><p>திருப்பூர், நவ.3-காளிவேலம்பட்டி பகுதி பொதுமக்கள் வீட்டுமனை பட்டா கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் திங்களன்று மனு அளித்தனர்.</p><p>திருப்பூர் மாவட்டம், பல்லடம் ஒன்றியம், சுக்கம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட காளிவேலம்பட்டி பகுதியை சேர்ந்த25க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தோர் தொடர்ச்சியாக3 ஆண்டுகளாக இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுத்து வருகின்றனர். ஆனால், இதன் மீது நடவடிக்கைஎடுக்கவில்லை எனவும், புதிய மாவட்ட ஆட்சியர் தங்கள் கோரிக்கை மீது விரைந்து நடவடிக்கை எடுத்து வீட்டுமனை பட்டா வழங்கிட வேண்டுமென கேட்டுக் கொண்டனர்.இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் சா.பிரவீன் குமார், கிளைச் செயலாளர் நாகராஜ் உட்பட 25க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram