தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கொல்கத்தா: உணவுக்கான போராட்டத்தின் தியாகிகள் நினைவிடத்தில் சிபிஎம் தலைவர்கள் அஞ்சலி!

yesterday
கொல்கத்தா: உணவுக்கான போராட்டத்தின் தியாகிகள் நினைவிடத்தில் சிபிஎம் தலைவர்கள் அஞ்சலி!

கொல்கத்தாவின் சுபோத் மல்லிக் சதுக்கத்தில் அமைந்துள்ள 1959-ஆம் ஆண்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘உணவுக்கான போராட்டத்தில்’ உயிர்நீத்த தியாகிகளின் நினைவிடத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், மேற்கு வங்க மாநிலச் செயலாளருமான முகமது சலீம், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஸ்ரீதீப் பட்டாச்சார்யா, மூத்த தலைவர் சூர்ய காந்த மிஸ்ரா மற்றும் மேற்கு வங்க இடது முன்னணியின் பிற மூத்த தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

1959-ஆம் ஆண்டின் உணவுக்கான போராட்டம் என்பது, மேற்கு வங்கத்தில் நிலவிய கடுமையான உணவு நெருக்கடி, பசி மற்றும் கொள்ளை லாபம் ஈட்டும் போக்கு ஆகியவற்றிற்கு எதிராகத் தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள் மற்றும் சமூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களையும் ஒன்றிணைத்த ஒரு மாபெரும் மக்கள் திரள் போராட்டமாகும். உணவுயிண்மை, வறுமை, பசிக்கொடுமை ஆகியவற்றுக்குத் தீர்வு காணக் கோரி மாநிலம் முழுவதிலுமிருந்து 3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் திரண்டதால், 1959-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 அன்று கொல்கத்தா நகரம் 'சிவப்புக்கடல்' போல காட்சியளித்தது. ஜோதி பாசு மற்றும் பிற தலைவர்கள் இப்போராட்டத்திற்குத் தலைமை தாங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.