நொய்டாவில் சிபிஎம் தலைவர்கள் தடுத்து நிறுத்தம்! - போராட்டத்திற்கு பிறகு அனுமதி
17 Apr 2026, 6:30 pm

நொய்டாவில் நடைபெற்ற தொழிலாளர் போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட தலைவர்களின் குடும்பத்தினரைச் சந்திக்கச் சென்ற சிபிஎம் பிரதிநிதிக் குழுவை தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், பேச்சு வார்த்தை மற்றும் போராட்டத்திற்கு பிறகு அனுமதிக்கப்பட்டனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள ஆடை ஏற்றுமதி நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்களின் குறைந்தபட்ச ஊதிய உயர்வு மற்றும் முறையான வேலை நேரம் போன்ற கோரிக்கைகளுக்காக போராடி வருகின்றனர். இந்தப் போராட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் தொழிலாளர் தலைவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற சிபிஐ(எம்) குழு சென்றது. சிபிஎம் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் அம்ராராம் மற்றும் அருண் குமார், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வி.சிவதாசன் மற்றும் ஏ.ஏ.ரஹீம் ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

நொய்டா செக்டர் 8 பகுதிக்குச் சென்ற பிரதிநிதிக் குழுவை உத்திரப்பிரதேச காவல்துறையினர் பெரும் பாதுகாப்பு வளையம் அமைத்துத் தடுத்து நிறுத்தினர். இதை தொடர்ந்து, சிபிஎம் தலைவர்கள் அங்கேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை மற்றும் உறுதியான போராட்டத்தைத் தொடர்ந்து, அவர்களை சந்திக்க சிபிஎம் பிரதிநிதிக் குழுவுக்கு மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் அளித்தார்.