‘பாலியல் வன்முறை, போதை கலாச்சாரம், சாதி-மதவெறி இல்லாத தமிழ்நாடு’ ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தில் சிபிஎம் தலைவர்கள் கையெழுத்திட்டனர்
10 Jul 2026, 8:48 pm

‘பாலியல் வன்முறை, போதை கலாச்சாரம், சாதி-மதவெறி இல்லாத தமிழ்நாடு’ ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தில் சிபிஎம் தலைவர்கள் கையெழுத்திட்டனர்

சென்னை, ஜூலை 10 - போதைப்பொருள் விநியோகம், கடத்தலை முற்றிலும் தடுக்க சிறப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் பெ.சண்மு கம் வலியுறுத்தி உள்ளார். ‘பாலியல் வன்முறை, போதைக் கலாச்சாரம், சாதி-மதவெறி இல்லாத தமிழ்நாடு’ என்பதை வலி யுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் மாநிலம் முழு வதும் ஜூலை 5-25 வரை ஒரு கோடி கையெழுத்து பெறும் இயக்கம் நடைபெறுகிறது.

இந்த கையெழுத்து இயக்கத் தில் வெள்ளியன்று (ஜூலை 10) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பி னர் கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன், மத்தி யக் குழு உறுப்பினர் என்.குணசேக ரன் ஆகியோர் கையெழுத்திட்டனர். இந்நிகழ்வின் போது இளைஞர் பெருமன்றத்தின் மாநிலத் தலைவர் இரா.தமிழ்ப்பெருமாள், செயலாளர் க.பாரதி, சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் பொதுச் செயலாளர் த.லெனின்,

அனைத்திந்திய மாண வர் பெருமன்றத்தின் மாநிலச் செய லாளர் ப.தினேஷ், செயலாளர் ப. இப்ராஹிம் மற்றும் அ.மணிகண்டன், அபிஷேக் ஆகியோர் உடனிருந்த னர். அப்போது பேசிய பெ.சண்முகம், “மக்களிடையே விழிப்புணர்வை யும், ஒற்றுமையையும் ஏற்படுத்துகிற வகையில் நடைபெறும் இந்த கை யெழுத்து இயக்கத்தை சிபிஎம் பாராட்டுகிறது. பெண்கள், குழந்தை கள் மீதான வன்கொடுமை வயது வித்தியாசமின்றி நிகழ்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இத்தகைய குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தயவு தாட்சண்யமின்றி கைது செய்து, வழக்கு விசாரணையை விரைந்து முடித்து தண்டனை பெற்றுத் தர வேண்டும்.

சமூக வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை

போதைப் பொருள் நடமாட்டம் அதிகம் உள்ள மாநிலமாக தமிழ கம் உள்ளது. வெளி மாநிலங் களில் இருந்து ஏராளமான போதைப் பொருட்கள் வருகிறது. பள்ளி மாண வர்கள் முதல் வயதானவர்கள் வரை பரவியுள்ள போதைப்பழக்கம் சமூகத்தின் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டை. போதைப் பொருள் விற்பனை, கடத்தலில் யார் ஈடுபட்டா லும் அவர்கள் மீது கடுமையான நட வடிக்கை எடுக்க வேண்டும். சாதிய அணிதிரட்டல், சாதிய சங்கங்கள் வலுவடைவது சமூகத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுகிறது. சாதி, மதவெறி எந்த வகையில் வந்தாலும் அதை தடுக்க வேண்டும்” என்றார்.