முந்தய பக்கம்

வீடுகளை புதுப்பிக்க உதவிய சிபிஎம் தலைவர்களுக்கு பாராட்டு

7 Mar 2026, 2:36 pm
வீடுகளை புதுப்பிக்க உதவிய சிபிஎம் தலைவர்களுக்கு பாராட்டு
<p><strong>வீடுகளை புதுப்பிக்க உதவிய சிபிஎம் தலைவர்களுக்கு பாராட்டு</strong></p> <p>நாகர்கோவில், மார்ச் 7- &nbsp;கன்னியாகுமரி மாவட்டம், இராஜாக்க மங்கலம் ஊராட்சி ஒன்றியம், இராஜாக்க மங்கலம் துறை சுனாமி காலனியில் 2005ஆம் ஆண்டு தொண்டு நிறுவனத் தால் கட்டப்பட்ட பல வீடுகளின் மேற்கூரை கள் சேதமடைந்து மிகப்பெரிய பாதிப்பு களை ஏற்படுத்தி வந்தது. மழைக் காலத்தில் தண்ணீர் ஒழுகி வீடுகளில் மக்கள் படுப்பதற்கோ, உணவு சமைப்ப தற்கோ, குழந்தைகள் படிப்பதற்கோ இயலாத நிலை இருந்தது. சுவர்களில் மழைநீர் புகுந்து மின்சாரம் கசிந்து ஷாக் அடிக்கும் ஆபத்து ஏற்பட்டது. இரவு நேரங்களில் பலர் அருகில் இருந்த நிழற்குடைகளில் தூங்க வேண்டிய அவல நிலை இருந்தது. &nbsp;இதுகுறித்து அகில இந்திய விவசா யத் தொழிலாளர்கள் சங்கத்தின் கவ னத்திற்கு வந்தன. தோழர்கள் நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுத லும் நம்பிக்கையும் ஊட்டினர். பின்னர் சேதமடைந்த வீடுகளை பழுது பார்த்து புதுப்பித்து தர அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. சங்கம் மற்றும் சிபிஎம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. &nbsp;இரண்டு ஆண்டுகால தொடர் நடவ டிக்கைகளுக்கு பின்னர் புதுப்பிக்கப்பட்ட வீடுகளில் மக்கள் மகிழ்ச்சியுடன் குடி யேறத் தொடங்கினர். &nbsp;போராட்டங்களை நடத்தி &nbsp;வீடுகளை புதுப்பித்துத் தர உதவிய சிபிஎம் கட்சி யின் தலைவர்கள் மற்றும் தோழர்களு க்கு நன்றியும் பாராட்டும் தெரிவிக்கும் வகையில் சுனாமிக் காலனியில் கூட்டம் நடைபெற்றது.&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram