சிறை திரைப்பட இயக்குநருக்கு சிபிஎம் தலைவர்கள் பாராட்டு
22 Jan 2026, 2:57 pm
<p><strong>சிறை திரைப்பட இயக்குநருக்கு சிபிஎம் தலைவர்கள் பாராட்டு</strong></p>
<p>சமூகத்தில், தனி மனித சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறை மற்றும் நீதித்துறையாலும் கூட, விளிம்புநிலை மக்கள் குறிப்பாக சிறுபான்மையினர் வஞ்சிக்கப்படும் அவலத்தை முன்வைத்த திரைப்படமாக ‘சிறை’ அண்மையில் வெளியாகி பல்வேறு தரப்பினரின் கவனத்தையும் பாராட்டையும் பெற்றுள்ளது. இதையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகமான தோழர் பி. ராமமூர்த்தி நினைவகத்திற்கு வருகை தந்த, ‘சிறை’ திரைப்படத்தின் இயக்குநர் சுரேஷ் ராஜ்குமாரிக்கு, கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், மத்திய கட்டுப்பாட்டுக்குழுத் தலைவர் ஜி. ராமகிருஷ்ணன் ஆகியோர் பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்தனர். மாநிலக்குழு உறுப்பினர்கள் ஆர். பத்ரி, வெ. ராஜசேகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.</p>
