தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கேரளத்தில் கும்பமேளா புகழ் மோனலிசா முகமது பர்மான் திருமணம் சிபிஎம் தலைவர்கள் நேரில் வாழ்த்து

12 Mar 2026, 4:20 pm
கேரளத்தில் கும்பமேளா புகழ் மோனலிசா முகமது பர்மான் திருமணம்  சிபிஎம் தலைவர்கள் நேரில் வாழ்த்து
<p><strong>கேரளத்தில் கும்பமேளா புகழ் மோனலிசா முகமது பர்மான் திருமணம் &nbsp;சிபிஎம் தலைவர்கள் நேரில் வாழ்த்து</strong></p> <p>திருவனந்தபுரம், மார்ச் 12- கும்பமேளா மூலம் அனைவரின் கவ னத்தையும் ஈர்த்த பெண் மோனலிசா போஸ்லேவும் முகமது பர்மானும் கேரளத்தில் உள்ள பூவாரில் திருமணம் செய்து கொண்டனர். &nbsp; மோனலிசாவும் பர்மானும் திரைப்பட த்தின் படப்பிடிப்பு தொடர்பாக கேரளத்தின் அழகிய கடற்கரையான பூவாருக்கு வந்த னர். அவர்கள் ஆறு மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். இருவரது குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், திருவனந்த புரம் மாவட்டம் பூவார் அருகில் உள்ள அனுமானூர் ஸ்ரீ நயினார் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். மற்ற மாநிலங்களில் பெரும் எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதில் உறுதியாக இருந்ததால் கேரளாவைத் தேர்ந்தெடுத்ததாக இருவரும் கூறினர். திருமணத்தில் கல்வி அமைச்சர் வி. சிவன் &nbsp;குட்டி, சிபிஎம் மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன், திருவனந்தபுரம் மாவட்டச் செயலாளர் ஏ.ஏ. ரஹீம் எம்.பி. &nbsp;ஆகியோர் உடனிருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.