சிங்காரவேலரின் சிலைக்கு சிபிஎம் தலைவர்கள் மலரஞ்சலி
18 Feb 2026, 3:04 pm

சிங்காரவேலரின் சிலைக்கு சிபிஎம் தலைவர்கள் மலரஞ்சலி

சிந்தனைச் சிற்பி தோழர் சிங்காரவேலரின் 166-ஆவது பிறந்ததினத்தை முன்னிட்டு, கடலூர் சிஐடியு அலுவலகத்தில் அமைந்துள்ள அவரின் சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாநகரச் செயலாளர் ஆர். அமர்நாத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்டச் செயலாளர் கோ. மாதவன், விவசாயிகள் சங்கப் பொருளாளர் எஸ். தட்சிணாமூர்த்தி, மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.கே.பக்கிரான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சிந்தனைச் சிற்பி ம. சிங்காரவேலரின் 166-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு புதன்கிழமையன்று (பிப்.18) சென்னை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அவரது சிலை அருகே வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி.கே. ரங்கராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி. செல்வா, செயற்குழு உறுப்பினர் இரா. முரளி, துறைமுகம் பகுதிச் செயலாளர் ஆர். குமார், மூத்த தலைவர் எம்.வி.கிருஷ்ணன், புலவர் பா.வீரமணி உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.