பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் பெற்றோருக்கு சிபிஎம் தலைவர்கள் ஆறுதல்
24 Mar 2026, 3:23 pm
<p><strong>பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் பெற்றோருக்கு சிபிஎம் தலைவர்கள் ஆறுதல்</strong></p>
<p>சேலம், மார்ச் 24– பாலியல் தொல்லையால் அரசு பள்ளி மாணவி தூக் கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், பாதிக்கப் பட்ட குடும்பத்தினரை மார்க் சிஸ்ட் கட்சி மற்றும் மாதர், மாணவர், வாலிபர் சங்க தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பள்ளி மாணவி, பக்கத்து வீட்டைச் சேர்ந்த சதீஷ் என்பவரின் தொடர்ச்சியான பாலியல் சீண்ட லால் மனவேதனை அடைந்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் தொடர் பாக சதீஷை போலீசார் கைது செய்துள்ள னர். இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.ராம மூர்த்தி, செவ்வாயன்று மாணவியின் பெற் றோரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித் தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜனவரி மாதமே சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப் பட்டும், அப்போது பணியில் இருந்த பெண் எஸ்.ஐ. மல்லிகா உரிய நடவடிக்கை எடுக்கா மல் சமரசம் செய்ய முயன்றதாக குற்றம் சாட்டினார். அப்போது நடவடிக்கை எடுத்தி ருந்தால் மாணவி உயிரிழப்பு ஏற்பட்டிருக் காது என்றும் தெரிவித்தார். மேலும், சம்பந்தப்பட்ட எஸ்.ஐ. மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குற்றவாளிக்கு அதிகபட்ச தண் டனை வழங்க வேண்டும் என்றும், மாணவி குடும்பத்திற்கு அரசு அறிவித்த நிவாரணம் உடனடியாக வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்த நிகழ்வில், கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் கே.ராஜாத்தி, தாலுகா செய லாளர் ஏ.ஆறுமுகம், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.தேவி, மாவட்ட நிர்வாகி கள் ஜி.கவிதா, எஸ்.பவித்ரன், எஸ்.கே.சேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.</p>
