இலங்கை அமைச்சருடன் சிபிஎம் தலைவர்கள் சந்திப்பு
13 Jan 2026, 3:17 pm
<p><strong>இலங்கை அமைச்சருடன் சிபிஎம் தலைவர்கள் சந்திப்பு</strong></p>
<p>இலங்கை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் துறை துணை அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், செவ்வாய் (ஜன.13) அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகமான தோழர் பி. ராமமூர்த்தி நினைவகத்திற்கு வருகை தந்தார். இங்கு அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் க. கனகராஜ், டி. ரவீந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர். முன்னதாக அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பை, கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சால்வை அணிவித்து வரவேற்றார்.</p>
