ஐ.நா சபையின் மனித உரிமைகள் ஆணையர் எஸ்.முரளிதருக்கு சிபிஎம் தலைவர்கள் வாழ்த்து!
16 Jul 2026, 12:41 pm

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி மற்றும் மூத்த தலைவர்களான பிரகாஷ் காரத், பிருந்தா காரத் ஆகியோர், மூத்த வழக்கறிஞரும், முன்னாள் நீதிபதியுமான டாக்டர் எஸ்.முரளிதரை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தனர்.

தற்போது, இவர் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையராகவும், கிழக்கு ஜெருசலேம் உள்ளிட்ட ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதி மற்றும் இஸ்ரேல் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் சுதந்திரமான சர்வதேச விசாரணை ஆணையத்தின் தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.

கடந்த அக்டோபர் 2023-இல் காசா மீதான இஸ்ரேலின் இனப்படுகொலைப் போரை தொடங்கியதிலிருந்து அக்டோபர் 2025 வரை பாலஸ்தீனக் குழந்தைகளுக்கு எதிராக இஸ்ரேல் செய்த மனித உரிமை மீறல்களை ஆய்வு செய்து, அவரது தலைமையின் கீழ் செயல்படும் ஆணையம் வெளியிட்ட அறிக்கைக்காக டாக்டர் முரளிதருக்கு நேரில் சந்தித்து சிபிஎம் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.