தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சிறைமீண்ட நொய்டா தொழிலாளர்களுடன் சிபிஎம் தலைவர்கள் குழு சந்திப்பு!

5 Jun 2026, 12:45 am
சிறைமீண்ட நொய்டா தொழிலாளர்களுடன் சிபிஎம் தலைவர்கள் குழு சந்திப்பு!

சிறைமீண்ட நொய்டா தொழிலாளர்களுடன் சிபிஎம் தலைவர்கள் குழு சந்திப்பு!

போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டு, சுமார் ஒருமாத சிறைவாசத் திற்குப் பின், பிணையில் விடுவிக்கப்பட்ட நொய்டா தொழிலாளர்களை, பொதுச்செயலா ளர் எம்.ஏ. பேபி தலைமையிலான சிபிஐ(எம்) பிரதிநிதிக் குழு சந்தித்தது.

பிரதிநிதிக் குழுவில் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர்கள் ஆர். அருண்குமார் மற்றும் தபன் சென், மாநிலங்களவை உறுப்பினர் வி. சிவதாசன், சிபிஎம் தில்லி மாநி லச் செயற்குழு உறுப்பினர்கள் ராஜீவ் குன்வார் மற்றும் பி.வி. அனியன், மேலும் நொய்டா வைச் சேர்ந்த தலைவர்கள் ராம் ஸ்வரத், கங்கேஷ்வர் மற்றும் ராம் சாகர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

காவல்துறை மூலம் கொடூரத் தாக்குதல்

இந்த பிரதிநிதிகள் குழுவிடம் பேசிய நொய்டா தொழிலாளர்கள், காவல்துறையால் உடல் ரீதியான தாக்குதல்களுக்கு தாங்கள் உள்ளாக்கப்பட்டதாகவும், போலியான ஆதா ரங்கள் மூலம் தங்கள்மீது பொய்வழக்குகள் புனையப்பட்டதாகவும், தங்களது போ ராட்டத்தை ஒடுக்குவதற்காக பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும் பிரதிநிதிக் குழுவிடம் தெரி வித்தனர்.

ஏப்ரல் மாதம் நடைபெற்ற தொழிலாளர் போராட்டத்தைத் தொடர்ந்து, ‘ஃபாப்ஸ்ட்ராக்ட் குளோதிங்’ (‘Fabstract Clothing’) என்ற ஆடைத் தொழிற்சாலையைச் சேர்ந்த 50 தொழிலாளர்கள் தொழிற்சங்க இயக்கத்தில் இணைந்தனர். இவர்கள், தங்கள் குறை களை பிரதிநிதிக் குழுவின் முன் எடுத்து ரைத்தனர்.

சங்கம் சேருவதைத் தடுக்க நிர்வாகங்கள் தீவிரம்

வாகனத் துறை சார்ந்த நிறுவனமான ‘விப்ராகௌஸ்டிக் இந்தியா’ (‘Vibracoustic India’)-வின் தொழிலாளர் பிரதிநிதிகளையும் சிபிஐ(எம்)பிரதிநிதிக் குழு சந்தித்தது.

தொழிற்சங்கங்கள் அமைப்பதையும், ஒன்றுபடுவதற்கான தங்கள் உரிமையைப் பயன்படுத்துவதையும் நிர்வாகங்கள் தொ டர்ச்சியாக தடுக்க முயற்சிப்பதாகவும்; அத்துடன், தலைமைப் பொறுப்புகளை ஏற்ப வர்கள் பெரும்பாலும் வேலையிலிருந்து நீக்கப்படுவதாகவும் ‘ஃபாப்ஸ்ட்ராக்ட் குளோ திங்’ மற்றும் ‘மதர்சன்’ (‘Motherson’) ஆகிய இரு நிறுவனங்களைச் சேர்ந்த தொழிலா ளர்களும் தெரிவித்தனர்.

ஒற்றுமை மூலம் தொழிலாளர்கள் பதிலடி

தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் ஒடுக்கு முறை, கைதுகள் மற்றும் பணிநீக்கங்கள் ஆகியவை, தொழிலாளர் உரிமைகள் மீதான தொடர் தாக்குதல்களைத் தெளிவாக வெளிப் படுத்துகின்றன. ஆயினும், போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தங்கள் மீதான தாக்குதல்களுக்கு, ஒற்றுமை, அமை ப்பு ரீதியான செயல்பாடு மற்றும் கூட்டு எதிர்ப்பு ஆகியவற்றின் மூலம் தொழிலாளர்கள் மிக வலிமையான பதிலடியைக் கொடுத்து வருகின்றனர்.

தொழிலாளர்கள் உடனான சந்திப்புக்குப் பிறகு சிபிஐ(எம்) பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி, செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

தொழிலாளர்களைச் சந்திக்க அனுமதி மறுப்பு

அப்போது, தொழிலாளர்கள் மீது காவல் துறை வன்முறையை ஏவிவிட்டதற்காகவும், அவர்கள் மீது பொய் வழக்குகளைப் பதிவு செய்ததற்காகவும் உத்தரப்பிரதேச மாநில அரசை கடுமையாக விமர்சித்தார். அநியாய மாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தொழி லாளர்களைச் சந்திக்க, அதிகாரிகள் தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டதையும் அவர் வன்மையாகக் கண்டித்தார். அவர்களில் சிலர் பிணை கோரி விண்ணப்பிக்கவோ அல்லது முறையான சட்ட உதவிகளையோ கூட பெற இயலாத நிலையில் உள்ளனர். இது அவர்களின் அடிப்படை உரிமைகளை மறுப்பதாகும் என்று குற்றம்சாட்டினார்.

உ.பி. பாஜக அரசு எதையோ மறைக்க முயற்சிக்கிறது

“கடந்த சில நாட்களாகவே, எங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் வி. சிவ தாசன் வாயிலாக, சிறையில் உள்ள தொழி லாளர்களைச் சந்திப்பதற்கான அனுமதியைப் பெற நாங்கள் முயற்சி செய்து வந்தோம். ஆனால், எங்களது கோரிக்கையை உயர் அதிகாரிகள் நிராகரித்து விட்டதாகச் சிறைத் துறை அதிகாரிகள் எங்களிடம் தெரிவித்தனர். இது முற்றிலும் பொறுப்பற்ற செயலாகும். அரசு எதையோ மறைக்கப் பார்க்கிறது என்ப தையே இந்நிகழ்வு உணர்த்துகிறது,” என்றும் எம்.ஏ. பேபி குற்றம் சாட்டினார்.

தொழிலாளர்களின் பக்கம் நின்று, அவர்க ளுக்குச் சட்ட உதவிகளை வழங்குவதோடு, அவர்களின் போராட்டங்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவளிக்கும் என்று பேபி உறுதியளித்தார். (ந.நி.)

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.