தில்லியில் அகில இந்திய பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி உள்ளிட்ட தலைவர்கள் கைது சிபிஎம் மறியல் - ஆர்ப்பாட்டம்
10 Oct 2026, 9:22 pm

தில்லியில் அகில இந்திய பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி உள்ளிட்ட தலைவர்கள் கைது சிபிஎம் மறியல் - ஆர்ப்பாட்டம்

சிவகங்கை, அக்.10-தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரைப் பதவி நீக் கம் செய்யக் கோரி தில்லியில் போராட்டம் நடத்த முயன்ற மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி உள்ளிட்ட தலைவர்களைக் கைது செய்த தில்லி காவல்துறையைக் கண்டித்து தமிழகம் முழுவதும் சனிக்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட் டம் மற்றும் மறியலில் ஈடுபட்டனர்.சிவகங்கை அரண்மனை வாசலில் மாவட்டச் செயலாளர் ஏ.ஆர்.மோகன் தலைமை வகித்தார். விவசாயிகள் சங்கச் செயலாளர் வீரபாண்டி, சுரேஷ், மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் அய்யம் பாண்டி, முத்துராமலிங்கபூபதி உள் ளிட்டோர் பங்கேற்றனர்.காரைக்குடியில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் திருப்பத்தூர் ஒன்றியச் செயலாளர் எஸ்.முருகேசன், காரைக்குடி வட்டச் செயலாளர் கே.ஆர்.அழகர்சாமி, மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் வி.கருப்புசாமி, எ.ஆறுமுகம் உள்ளிட்ட 11 பேர் பங்கேற்று கைதாகினர்.

இராமநாதபுரம்

இராமநாதபுரத்தில் அரண் மனை அருகே உள்ள அஞ்சல் அலுவலகம் முன்பு நடைபெற்ற மாவட்டச் செயலாளர் ரெ.குருவேல் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.காசிநாததுரை, நா.கலையரசன், எம்.சிவாஜி, வி.மயில்வாகணன், க.கருணாகரன், எம்.ராஜ்குமார், இ.கண்ணகி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் பி.செல்வராஜ், பி.கல்யாணசுந்தரம், எம்.முருகன், மாற்றுத் திறனாளி சங்க மாநில துணைச் செயலாளர் கே.நாகராஜ், இராமேஸ்வரம் தாலுகா குழு உறுப்பினர்கள் ஏ.அசோக், முதுகுளத்தூர் தாலுகா குழு உறுப்பினர் என்.சண்முகையா, மாதர் சங்க மாவட்ட பொருளாளர் கே.மாலதி, இராமநாதபுரம் தாலுகா செயலாளர் கே.சசிகலா, மாற்றுத் திறனாளி சங்க மாவட்ட துணைத் தலைவர் நிழற்வேணி, சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர் எம்.அய்யாதுரை மற்றும் பலர் கலந்து கொண் டனர்.

விருதுநகர்

விருதுநகர் பழைய பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. சிபிஎம்

மாவட்டச் செயலாளர் ஆ.குருசாமி, சிபிஐ மாவட்டச் செயலாளர் செந் தில்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் கே.அர்ஜூனன் துவக்கி வைத்து பேசினார். சிபிஐ மாநில செயற்குழு உறுப்பினர் தி.ராமசாமி நிறைவு செய்து பேசினார். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.முத்துக்குமார், பி.என்.தேவா, ஆர்.பாலசுப்பிரமணியன், எஸ்.லட்சுமி, பி.மாரியப் பன், எஸ்.வி.சசிக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ பொன்னுப்பாண்டி, சிபிஐ மாநிலக்குழு உறுப்பினர் வி.பாலமுருகன்உட்பட பலர் பங் கேற்றனர்.