சிபிஎம் மேற்கு வங்க மாநிலக்குழு உறுப்பினர் தபஸ் சின்ஹா மீது ஆர்எஸ்எஸ் குண்டர்கள் கொலைவெறித் தாக்குதல்
11 Jul 2026, 8:36 pm
<p><strong>சிபிஎம் மேற்கு வங்க மாநிலக்குழு உறுப்பினர் தபஸ் சின்ஹா மீது ஆர்எஸ்எஸ் குண்டர்கள் கொலைவெறித் தாக்குதல்</strong></p><p>கொல்கத்தா மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி யின் மேற்கு வங்க மாநிலக்குழு உறுப்பினரும், வாலிபர் சங்க முன்னாள் பொதுச் செயலாளருமான தபஸ் சின்ஹா ஆர்எஸ்எஸ் குண்டர்களால் கொடூர மான முறையில் தாக்கப்பட்டுள் ளார். அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பின ராகவும் திறம்பட பணியாற்றி வரும் தபஸ் சின்ஹா, மேதினிபூரில் நடை பெறவுள்ள நில உரிமை தொடர்பான மாநில மாநாட்டிற்கான ஏற்பாடு களை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, ஆர்எஸ்எஸ் கும்பல் அவரை வழிமறித்துத் தாக்கியுள்ளது. இந்தத் தாக்குத லில் தபஸ் சின்ஹா பலத்த காய மடைந்துள்ளார். அவரது வலது தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. தகவலறிந்த சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பி னரும், அகில இந்திய விவசாயி கள் சங்கத்தின் பொதுச்செயலாளரு மான விஜூ கிருஷ்ணன் மற்றும் கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் புட்டாதண்டா ஆகியோர் தபஸ் சின்ஹாவின் இல்லத்திற்கு நேரில் சென்று நலம் விசாரித்தனர். இந்தச் சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்த சிபிஎம் மற்றும் அகில இந்திய விவசாய சங்கம் மாநிலம் தழுவிய போராட் டத்திற்கு அழைப்பு விடுத்தது. இத னால் காவல்துறை ஒருவரை பெயரளவில் கைது செய்துள்ளது. மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் குண்டர்கள் சிபிஎம் தலைவர்கள் மீது பரவலான தாக்கு தலைத் தொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.</p>
