சிபிஎம் திருவள்ளூர் மூத்த தோழர் எஸ்.எம்.ஹனீப் மறைவு: பெ.சண்முகம் இரங்கல்
13 Sept 2026, 10:08 pm

சிபிஎம் திருவள்ளூர் மூத்த தோழர் எஸ்.எம்.ஹனீப் மறைவு: பெ.சண்முகம் இரங்கல்

சென்னை, செப். 13:மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவள்ளூர் மாவட்டக் குழு உறுப்பினரும், மூத்த தோழருமான எஸ்.எம். ஹனீப் உடல்நலக்குறைவுகாரணமாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபலனின்றி ஞாயிறு காலை 8 மணி அளவில் காலமானார். அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் ஆழ்ந்த இரங்கலைத்தெரிவித்துள்ளார்.இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

முன்னுதாரணமான தோழர்

தோழர் எஸ்.எம். ஹனீப் 1980-களில் பள்ளிப் பருவத்திலேயே மாணவர் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். பின்னர் வாலிபர் சங்கத்தில் இணைந்து கிராமப்புற இளைஞர்களைத் திரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டார். எம்.ஆர்.எப் தொழிற்சாலையில் ஒப்பந்தத் தொழிலாளராகப் பணியிலிருந்தபடியே வாலிபர் சங்கப் பணிகளில் ஈடுபட்டு வந்த அவர், பின்னர் முழுநேரக் கட்சிஊழியராகப் பணியாற்றத் தொடங்கினார்.

கட்சியின் பொன்னேரி, மீஞ்சூர், சோழவரம் பகுதிகளில் வட்டக் குழு செயலாளராகவும், மாவட்ட செயற்குழுஉறுப்பினராகவும் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். மேலும், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவராகவும், சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மாவட்ட தலைவராகவும் திறம்படச்செயல்பட்டார். சிஐடியு தொழிற்சங்க மாவட்ட நிர்வாகியாகி முறைசாரா கட்டுமானத் தொழிலா

ளர்களை அணிதிரட்டியதுடன், செந்தொண்டர் படையை உருவாக்கிக் கேப்டனாகவும் தொடர்ந்து செயலாற்றிவந்தார்.கட்சியின் முடிவுகளை உறுதியாக அமல்படுத்துவதிலும், கிராமப்புறக் கிளைகளை உயிரோட்டமாகநடத்துவதிலும் அவர் முன்னுதாரணமாகத் திகழ்ந்தார்.

சிறையில் அடைக்கப்பட்டவர்

கடந்த 2000-ஆம் ஆண்டில் விவசாயிகளின் கோரிக்கைகளை முன்வைத்து சென்னை அரசுப் பொது மருத்துவமனை அருகில் தோழர் கே. பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் பங்கேற்றுக் கைது செய்யப்பட்டு 8 நாட்கள் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது குடும்பம் முழுக்க முழுக்க இயக்கக் குடும்பமாகும். இவரது மூத்த சகோதரர் எஸ்.ஏ. கலாம் வாலிபர் சங்க மாவட்ட பொருளாளராகவும், எல்ஐசி முகவர்சங்க மாநில பொதுச் செயலாளராகவும் மாவட்ட தலைவராகவும் உள்ளார். இளைய சகோதரர் இமாம் மின்சார வாரியத்தில் பணியாற்றி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பில் செயலாற்றி வருகிறார். அவரது மகளுக்கு காஞ்சிபுரத்தில் மத மறுப்புத் திருமணம் செய்து வைத்து முன்னுதாரணம் படைத்தவர். கொரோனா காலத்தில் மகள்இழந்த துயரம் வாட்டிய நிலையில், தற்போது மகன் ஆசிப்பிற்கு வரும்செப்டம்பர் 17-ல் திருமணமும், 20-ல் வரவேற்பும் நடைபெறவுள்ள நேரத்தில் அவரது மறைவு குடும்பத்தினருக்கும் இயக்கத்திற்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

40 ஆண்டுகளுக்கு மேலாகக் கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் திறம்படப் பணியாற்றி மறைந்த தோழர் எஸ்.எம். ஹனீப்பின் மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் மாநில செயற்குழு தனதுஆழ்ந்த இரங்கலையும், குடும்பத்தாருக்கு அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

மறைந்த தோழரின் விருப்பற்திற்கேற்ப அவரது உடல் திருவள்ளூர்மருத்துவக் கல்லூரி மாணவர்களின் ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.