கோயம்புத்தூரில் நீட் மறுதேர்வு மன அழுத்தத்தால் உயிரை மாய்த்துக்கொண்ட
2 Jul 2026, 10:27 pm
<p>கோயம்புத்தூரில் நீட் மறுதேர்வு மன அழுத்தத்தால் உயிரை மாய்த்துக்கொண்ட மாணவி அனு கீர்த்தனாவின் இல்லத்திற்கு (கோவை புதூர்) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வியாழனன்று நேரில் சென்று மாணவியின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர், சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் மாவட்ட பொதுச்செயலாளரும், மாணவியின் தந்தையுமான செந்தில்பிரபு உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். உடன் சிபிஎம் மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.கனகராஜ், டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ஜான் அந்தோணி ராஜ், பொருளாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.</p>
