தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சிபிஎம் தலைவர்கள் - தோழர்கள் இறுதி அஞ்சலி! மூத்த தோழர் ராஜலட்சுமி உடல் மருத்துவக் கல்விக்காக ஒப்படைப்பு!

13 Sept 2026, 12:42 am
சிபிஎம் தலைவர்கள் - தோழர்கள் இறுதி அஞ்சலி!  மூத்த தோழர் ராஜலட்சுமி உடல் மருத்துவக் கல்விக்காக ஒப்படைப்பு!

சிபிஎம் தலைவர்கள் - தோழர்கள் இறுதி அஞ்சலி! மூத்த தோழர் ராஜலட்சுமி உடல் மருத்துவக் கல்விக்காக ஒப்படைப்பு!

செங்கல்பட்டு, செப். 12 -மூத்த உறுப்பினர் தோழர் ஆர்.ராஜலட்சுமி நரசிம்மனின் உடல், மருத்துவக் கல்விக்காக ஒப்படைக்கப்பட்டது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கல்பட்டு பகுதி மையக்கிளையின் மூத்த உறுப்பினர் தோழர் ஆர். ராஜலட்சுமி (91) வயது மூப்பு காரணமாக வெள்ளிக்கிழமை (செப். 11) அன்று செங்கல்பட்டில் காலமானார்.

இறுதிவரை கம்யூனிசக் கொள்கைப் பற்றுடனும், மக்கள் நலனையே லட்சியமாகவும் கொண்டிருந்த தோழர் ஆர்.ராஜலட்சுமியின் மறைவு, பெரும் சோகத்தையும் ஆற்ற முடியாத துயரத்தையும் ஏற்படுத்தியது. கட்சியின் செங்கல்பட்டு மாவட்டக்குழு அலுவலகத்தில் வைக்கப்பட்ட நிலையில், பல்வேறு தரப்பினரும் திரண்டுஅஞ்சலி செலுத்தினர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், மூத்த தலைவர்கள் செல்வ சிங், பா. சுந்தரராஜன், மாவட்டச்செயலாளர்கள் ஜி. செல்வா (மத்தியச் சென்னை), ஆர். வேல்முருகன் (தென் சென்னை), ப.சு. பாரதி அண்ணா (செங்கல்பட்டு), கே. நேரு (காஞ்சிபுரம்), மாதர் சங்கத்தின் ஸ்தாபக தலைவர்கள் குஞ்சிதம் பாரதிமோகன், விஜயா ஜானகிராமன், மாநில நிர்வாகிகள் பி. சுகந்தி, ஜி. ராணி, எம். சித்ரகலா, தமிழ்நாடு விவசாயிகள்சங்கத்தின் மாநிலச்செயலாளர் துளசி நாராயணன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தலைவர்களும் பொதுமக்களும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மத்திய கட்டுப்பாட்டுக்குழுத் தலைவர் ஜி. ராமகிருஷ்ணன்,மத்தியக்குழு உறுப்பினர் கே. பாலபாரதி, மூத்த தலைவர்கள் டி.கே. ரங்கராஜன், ஏ.கே. பத்மநாபன், மாநிலசெயற்குழு உறுப்பினர்கள் எஸ். கண்ணன், கே. சுவாமிநாதன், செ. முத்துக்கண்ணன், மாநிலக்குழு உறுப்பினர்கள்ஐ. ஆறுமுக நயினார், பி. ஜான்சிராணி, எஸ். வாலண்டினா, எஸ். நம்புராஜன், பி. கற்பகம், ஏ. குமார் மற்றும்மாவட்டச் செயலாளர்கள் மா. கணேசன் (மதுரை மாநகர்), ஆர். ரகுராமன் (ஈரோடு), சங்கரி (வேலூர்) உள்ளிட்டோர் தொலைபேசி வாயிலாகவும், சமூக ஊடகங்கள் வாயிலாகவும் தங்களது கண்ணீர் அஞ்சலியைச் செலுத்தினர்.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்புஉரிமைக்கான சங்கம், வாலிபர் சங்கம், மாணவர் சங்கம், சிஐடியு, விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர்சங்கம், ஓய்வூதியர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தலைவர்களும் பெருந்திரளாக வந்து அஞ்சலி செலுத்தினர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கல்பட்டு மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இ.சங்கர், வி. அரிகிருஷ்ணன், சேஷாத்திரி, எஸ். ராஜா, பகத்சிங்தாஸ், எம்.செல்வம், செங்கல்பட்டு பகுதிச் செயலாளர் கே. வேலன் மற்றும் தி.மு.க., மனிதநேய மக்கள்கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்களும் பங்கேற்று இறுதி மரியாதை செலுத்தினர்.இறுதியாகச் செங்கல்பட்டு கட்சி அலுவலகத்தில் இருந்து தோழர் ராஜலட்சுமியின் உடல் முழக்கங்களுடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனையில் மருத்துவ மாணவர்களின் கல்வி மற்றும் ஆய்வுப் பணிக்காகத் ஒப்படைக்கப்பட்டது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.