தோழர் பி.தங்கையன் மறைவு சிபிஎம் தலைவர்கள் அஞ்சலி
28 Oct 2026, 8:21 pm

தோழர் பி.தங்கையன் மறைவு சிபிஎம் தலைவர்கள் அஞ்சலி

தோழர் பி.தங்கையன் உடலுக்கு மலர் மாலை வைத்து தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

திருவாரூர், அக்.28 -திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் காட்டூர், அகரத்திருநல்லூர் கிராமத்தில் வசிக்கும் ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்ட செயற்குழு உறுப்பினரும், மாவட்டக் குழு உறுப்பினர், கொரடாச்சேரி ஒன்றியச் செயலாளரும் முன்னாள் அகரத்திருநல்லூர் ஊராட்சி மன்றத் தலைவரு

மான மூத்த தோழர் பி.தங்கையன் செவ்வாய்க்கிழமை காலமானார்.

தோழரின் மறைவு செய்தி அறிந்த சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கே.சாமுவேல்ராஜ், கே.சுவாமிநாதன், மாநிலக் குழு உறுப்பினர் நாகைமாலி, மாவட்டச் செயலாளர்கள் வி.மாரிமுத்து (நாகை), எஸ்.சங்கர் (புதுக்கோட்டை), சின்னை.பாண்டியன் (தஞ்சாவூர்), பி.சீனிவாசன் (மயிலாடுதுறை), டி.முருகையன் (திருவாரூர்), மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.சுந்தரமூர்த்தி, எம்.சேகர், கே.ஜி.ரகுராமன் மற்றும் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் எஸ்.பிரபாகரன், தமிழ்நாடு உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் சி.ஜெயக்குமார், மாநில பொருளாளர் எம்.விஜயசாரதி மற்றும் ஆசிரியர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் தோழர் பி.தங்கையன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து நடைபெற்ற இரங்கல் கூட்டத்திற்கு சிபிஎம் கொரடாச்சேரி ஒன்றியச் செயலாளர் கே.கோபிராஜ் தலைமையில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி.முருகையன், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் எஸ்.பிரபாகரன், சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கே.சாமுவேல்ராஜ், எஸ்.சாமிநாதன், மாநிலக் குழு உறுப்பினர் ஏ.சிங்காரவேல் உள்ளிட்டோர் இரங்கல் உரையாற்றினர். அன்னாரது இறுதி நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

மறைந்த தோழர் பி.தங்கையனுக்கு லீலாவதி, விமலா, செங்கொடி ஆகிய 3 மகள்களும், சிவராமன் என்ற ஒரு மகனும் உள்ளனர். தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மயிலாடுதுறை மாவட்டச் செயலாளராக லீலாவதி செயல்படுகிறார்.

சிபிஎம் தலைவர்கள் ஆறுதல்

சிபிஎம் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், மூத்த தலைவர் என். சீனிவாசன் ஆகியோர் தோழரின் குடும்பத்தினரிடம் இரங்கல் தெரிவித்தனர்.