தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

துணிச்சல் மிக்க மக்கள் போராளியாக விளங்கியவர் தோழர் என். செல்லத்துரை! சிபிஎம் மாநில செயற்குழு இரங்கல்

5 May 2026, 10:11 pm
துணிச்சல் மிக்க மக்கள் போராளியாக  விளங்கியவர் தோழர் என். செல்லத்துரை! சிபிஎம் மாநில செயற்குழு இரங்கல்
<p><strong>துணிச்சல் மிக்க மக்கள் போராளியாக விளங்கியவர் தோழர் என். செல்லத்துரை! சிபிஎம் மாநில செயற்குழு இரங்கல்</strong></p><p>சென்னை, மே 5 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் என். செல்லத்துரை மறைவுக்கு, கட்சியின் மாநில செயற்குழு இரங்கல் தெரி வித்துள்ளது. இதுதொடர்பாக, கட்சி யின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் விடுத்துள்ள இரங்கல் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயற்குழு உறுப்பி னரும், தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாவட்டத் தலைவருமான தோழர் என். செல்லத்துரை (67) உடல்நலக் குறைவால் உயிரிழந்து உள்ளார் என்ற செய்தி மிகவும் வேதனையளிக்கிறது. அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. தோழர் செல்லதுரை கல்லூரியில் படிக்கும் போதே மாணவர் பேரவைத் தலைவராக தேர்வு செய்யப் பட்டு மாணவர்களின் கோரிக் கைகளுக்காக பல்வேறு போராட்டங்களைத் தலைமை ஏற்று நடத்திய வர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு தீண் டாமைக் கொடுமைகளுக்கு எதிராகவும், மக்களின் அடிப்படை கோரிக்கை களுக்காகவும், விவசாயி களின் நலன்களுக்காகவும், பெரம்பலூர் மாவட்டம் அமைவதற்கும் பல்வேறு போராட்டங்களை நடத்தி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு பல ஆண்டு கள் சிறையில் அடைக்கப்பட்ட வர். 1981-இல் வேப்பந் தட்டை பகுதி மக்களுக்கு பேருந்து வசதி கேட்டு இவர் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டை எதிர்கொண்டவர். கட்சியின் ஒன்றுபட்ட திருச்சி மாவட்டக்குழு உறுப்பினர், பெரம்பலூர் மாவட்டம் உதயமான போது அதன் மாவட்டச் செயலா ளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலை வர், மாவட்டச் செயலாளர், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர், தலைவர், தமிழ் நாடு பால் உற்பத்தியாளர் கள் சங்கத்தின் மாநிலத் துணைத்தலைவர் என பல்வேறு பொறுப்புகளில் உழைக்கும் மக்களின் நலன்களுக்காக அயராது போராடியவர். அவரது மறைவு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சிக்கு ஏற்பட்ட பேரி ழப்பு. அவரது மறைவால் துய ருற்றுள்ள அவரது மகன்கள், குடும்பத்தினர் மற்றும் பெரம் பலூர் மாவட்ட கட்சித் தோழர்களுக்கு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறு தலையும் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.