தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சிபிஎம் மறைந்த மகத்தான தலைவர் கே.முத்தையா நினைவு தினம் கட்சி உறுப்பினர்கள் ரசீது வழங்கும் விழா

12 Jun 2026, 9:05 pm
சிபிஎம் மறைந்த மகத்தான தலைவர் கே.முத்தையா நினைவு தினம் கட்சி உறுப்பினர்கள் ரசீது வழங்கும் விழா

சிபிஎம் மறைந்த மகத்தான தலைவர் கே.முத்தையா நினைவு தினம் கட்சி உறுப்பினர்கள் ரசீது வழங்கும் விழா

தஞ்சாவூர், ஜூன் 12 - சுதந்திரப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தமிழக ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவருமான கே.முத்தையா நினைவு தின மான ஜூன் 10 அன்று, தஞ்சா வூர் மாவட்டம் பேராவூர ணியில் சேதுபாவாசத்திரம் ஒன்றியக் குழு சார்பில் கட்சி உறுப்பினர்கள் ரசீது வழங்கும் விழா நடை பெற்றது.

பேராவூரணி முடப்புளிக்காட்டில் பிறந்த கே.முத்தையா, அண்ணா மலைப் பல்கலைக்கழக மாணவர் பருவத்திலேயே விடுதலைப் போராட்டங் களிலும் கம்யூனிஸ்ட் இயக்கத்திலும் தன்னை இணைத்துக் கொண்டவர்.

சென்னை மாவட்டச் செய லாளராகப் பணியாற்றி யவர், கட்சியின் தலை மறைவு வாழ்க்கையிலும் சிறைவாசத்திலும் மார்க்சி யக் கொள்கைகளில் உறுதி யாக நின்றார்.

தீக்கதிர் நாளிதழ் மற்றும் செம்ம லர் இலக்கிய இதழின் ஆசிரி யராகச் செயலாற்றியதுடன், ‘உலைக்களம்’, ‘விளை நிலம்’ போன்ற நாவல்கள் வழியாகவும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தோற்றுநராகவும் கலை-இலக்கிய உலகில் சோசலிச யதார்த்தவாதப் பார்வைக்கு வலுவான அடித்தளம் அமைத்தார். கட்சியின் ஒன்றியச் செய லாளர் வி.ஆர்.கே. செந்தில்குமார் தலைமை தாங்கிய இவ்விழாவில், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன் கட்சி உறுப்பினர்களுக்கு ரசீதுகளை வழங்கிச் சிறப்பு ரையாற்றினார்.

மூத்த தலைவர் ஆர்.சி.பழனி வேலு, ‘கே.முத்தையா அவர்களின் வாழ்வும் வழியும்’ என்ற தலைப்பில் அவரது பன்முகப் பங்க ளிப்பைப் போற்றிப் புக ழஞ்சலி உரையாற்றினார். இந்நிகழ்வில் மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.எஸ். வேலுச்சாமி, வழக்கறிஞர் வீ.கருப்பையா, ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் பி.பெரியண்ணன், ஏ.இளங்கோவன், ஆர்.மகாலிங்கம், பி.நவநேசன் மற்றும் கிளைச் செயலாளர்கள் உட்படக் கட்சியினர் திரளாகக் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.