தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சிபிஎம் நிர்வாகி கொலை வழக்கு: பாஜக – ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை!

32 minutes before
சிபிஎம் நிர்வாகி கொலை வழக்கு: பாஜக – ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை!

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் சிபிஎம் நிர்வாகி சி.வி.தனராஜ் கொலை வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட பாஜக – ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தளிப்பறம்பா கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

2016ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி கண்ணூர் மாவட்டம் ராமந்தளியில் உள்ள தனது வீட்டின் அருகே தனராஜ் வந்துகொண்டிருந்தபோது, இருசக்கர வாகனங்களில் பின்தொடர்ந்து வந்த கும்பல் அவரை சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தது.

இந்த வழக்கை விசாரித்த தளிப்பறம்பா கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி கே.என்.பிரசாந்த், கடந்த நவம்பர் 23ஆம் தேதி பாஜக – ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த டி.பி. பிஜு, எம். விபின், எம். வைஷாக் ஆகிய மூன்று பேரையும் கொலைக் குற்றவாளிகளாக அறிவித்தார். இவர்கள் மூவரும் சகோதரர்கள் ஆவர். வழக்கில் தொடர்புடைய மற்ற 16 பேரையும் விடுதலை செய்தார்.

இந்த நிலையில், குற்றவாளிகள் மூவருக்கும் கொலைக் குற்றத்திற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொருவருக்கும் தலா ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மொத்த அபராதத் தொகையான ரூ.15 லட்சத்தை தனராஜின் குடும்பத்தினருக்கு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதேநேரத்தில், சதித்திட்டத்தில் தொடர்புடையதாகக் குற்றம்சாட்டப்பட்டு விடுதலை செய்யப்பட்ட 16 பேருக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்போவதாக அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் சி.கே.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.