முந்தய பக்கம்

வெள்ளைச்சாமி காலமானார்

14 Jun 2026, 11:38 pm
வெள்ளைச்சாமி காலமானார்
<p><strong>வெள்ளைச்சாமி காலமானார் </strong></p><p>தேனி, ஜூன் 14- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் போடி எஸ்.வெள்ளைச்சாமி (84) உடல் நலக்குறைவு காரணமாக ஞாயிறன்று காலமானார். மார்க்சிஸ்ட் கட்சி தொடங்கிய காலத்தில் இருந்து உறுப்பி னராக இருந்த தோழர் எஸ். வெள்ளைச்சாமி பல்வேறு போராட்டங்களில்கலந்து கொண்டு முன்னணி தோழராக விளங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போடி தாலுகா குழு உறுப்பினராக வும் சிஐடியு தாலுகா செயலாளராகவும் திறம்பட பணியாற்றினார். விலைவாசி உயர்வை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி நடத்திய மறியல் போராட்டத்தில் தனது துணைவியாருடன் கலந்து கொண்டு 23 நாட்கள் சிறையில் இருந்தார். வயது முதிர்வு காரணமாக வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். உடல்நலக்குறைவு காரணமாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அன்னாரது மறைவு செய்தி அறிந்து கட்சியின் மூத்த தலைவர் கே.ராஜப்பன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எல்.ஆர்.சங்கரசுப்பு, விவசாயி கள் சங்க மாவட்ட தலைவர் எஸ்.கே.பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக்குழு உறுப்பி னர் எஸ்.செல்வம் ஆகியோர் இறுதி மரியாதை செலுத்தி னர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram