தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பாஜக கூட்டணி ஆளும் ஆந்திர மாநிலத்தில் கொடூரம் கஞ்சா விற்பனைக் குண்டர்களால் சிபிஎம் தலைவர் பென்சலையா படுகொலை

30 Nov 2025, 3:38 pm
பாஜக கூட்டணி ஆளும் ஆந்திர மாநிலத்தில் கொடூரம் கஞ்சா விற்பனைக் குண்டர்களால்  சிபிஎம் தலைவர் பென்சலையா படுகொலை

பாஜக கூட்டணி ஆளும் ஆந்திர மாநிலத்தில் கொடூரம் கஞ்சா விற்பனைக் குண்டர்களால்  சிபிஎம் தலைவர் பென்சலையா படுகொலை

டிசம்பர் 2-ஆம் தேதி முழு அடைப்புப் போராட்டம்

நெல்லூர் ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் - ஜன சேனா - பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முத லமைச்சராக தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு உள்ளார். இம்மாநிலத்தின் நெல்லூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஊழியரும், பிரஜா  நாட்டிய மண்டலி என்ற கலாச்சார மக்கள் நாடகக் குழுவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான தோழர் பென்சலையா (37), கஞ்சா விற்ப னைக் குண்டர்களால் படுகொலை  செய்யப்பட்டார். பிரஜா நாட்டிய மண்டலி கலைக்குழு மூலம் கஞ்சா விற்பனை, போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயன்பாட்டுக்கு எதிராக தெருக்கூத்து முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார். தோழர் பென்சலையாவின் நாட கங்களுக்கு ஆந்திர மக்கள் நல்ல  வரவேற்பும், பாராட்டும் தெரிவித்து  வந்தனர். இந்நிலையில், தோழர் பென்ச லையா வெள்ளிக்கிழமை அன்று (நவ., 28) தனது குழந்தைகளின் முன்னிலையிலேயே கஞ்சா விற்ப னைக் குண்டர்களால், கத்தியால் குத்தி கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். நவம்பர் 30 அன்று (ஞாயிறு) விஜயவாடாவில் பெஞ்சலையாவின் குழுவினர் “யோகி வேமனா” என்ற பெயரில் கஞ்சா எதிர்ப்பு நாடகத்தை நடத்த  திட்டமிடப்பட்டிருந்ததற்கு ஒரு நாள் முன்னதாக இந்தக் கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது. தோழர் பென்சலையாவின் படு கொலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரி வித்துள்ளது. சிபிஎம் ஆந்திரப் பிரதேச  மாநிலச் செயலாளர் வி.ஸ்ரீனிவாச ராவ், நெல்லூர் மாவட்ட செயலா ளர் எம்.ரமேஷ் உள்ளிட்ட சிபிஎம்  தலைவர்கள், கட்சி ஊழி யர்கள் தோழர் பென்சலையா வின் உடலுக்கு நேரில் அஞ்சலி  செலுத்தினர். தொடர்ந்து செங் கொடி மற்றும் படுகொலைக்கு எதிர்ப்பு பதாகைகளுடன் நூற்றுக்க ணக்கான பங்கேற்ற இறுதி ஊர்வ லத்திற்கு பின்பு தோழர் பென்ச லையாவின் உடல் அடக்கம் செய்  யப்பட்டது. தோழர் பென்சலையாவின் குடும்பத்தினருக்கு உறுதியான ஆதரவு அளிப்போம் என உறுதி யளித்த சிபிஎம் மாநிலச் செயலாளர் வி.ஸ்ரீனிவாசராவ்,”அனைத்துக் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து கடுமையான நட வடிக்கை எடுக்க வேண்டும். டிசம்பர் 2-ஆம் தேதி சிபிஎம்  சார்பில் நெல்லூர் மாவட்டத்தில் கடையடைப்புப் போராட்டம் நடத்தப்படும்” என அறிவித் துள்ளார். குற்றவாளி சுட்டுப்பிடிப்பு இதற்கிடையே தோழர் பென்ச லையாவை கொன்ற முக்கிய குற்றவாளியான ஜேம்ஸ் என்பவர்  நெல்லூர் ஹவுசிங் போர்டு காலனி  அருகே பதுங்கி இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைக்க, நெல்லூர் ஆய்வாளர்கள் வேணு, சீனிவாச ராவ் தலைமையிலான தனிப்படை அங்கு சென்றது. ஜேம்ஸ் கத்தி மூலம் தாக்குதல் நடத்த காவலர் ஆதிநாராயணா பலத்த காயமடைந்தார். அவரை  காப்பாற்ற ஆய்வாளர் சீனிவாச  ராவ் ஜேம்ஸ் நோக்கி துப்பாக்கி யால் சுட்டார். இதில் ஜேம்ஸ் காலில்  காயமடைந்து சுருண்டு விழுந்தார். ஜேம்ஸ் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ள நிலையில், மற்ற குற்றவாளிகளை கைது செய்ய தீவிர தேடுதல் வேட்டையில் ஈடு பட்டது வருவதாக தனிப்படை காவல்துறை தெரிவித்துள்ளது.

குற்றவாளிகள் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்தவர்கள்: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்

தோழர் பென்சலையாவை கொலை செய்தது, கல்லுருப்பள்ளி வீட்டுவசதி வாரிய காலனியில் கஞ்சா மாபியாவை நடத்தி  வரும் அரவ காமக்ஷம்மா என்ற பெண்தான் என காவல்துறை மூலம்  தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மூத்த தலைவர் கோவர்தன் ரெட்டி,”நெல்லூர் கிராமப்புற மண்டலத்தில் தெலுங்கு தேசம் கட்சி யுடன் இணைந்து பணியாற்றும் ஒரு கஞ்சா கும்பல் தான் சிபிஎம்  தலைவரை கொன்றுள்ளது. சம்பவம் நடந்த உடனேயே,  நான் சிபிஎம் தலைவரின் வீட்டிற்குச் சென்று குடும்ப உறுப்பி னர்களுக்கு இரங்கல் மற்றும் ஆறுதல் தெரிவித்தேன். மேலும்,  அவர்களுக்கு அனைத்து அரசு உதவிகளையும் உறுதியளித்தேன்” என அவர் கூறினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.